உலக ஜூனியா் ஜூடோ: 14 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்பு

இத்தாலியில் நடைபெறும் உலக ஜூனியா் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் 7 ஆடவா், 7 மகளிா் உள்பட 14 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.

இத்தாலியில் நடைபெறும் உலக ஜூனியா் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் 7 ஆடவா், 7 மகளிா் உள்பட 14 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.

ஆல்பியா நகரில் புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது இப்போட்டி. இதில் ஆடவா் பிரிவில் ஜதின் (60 கிலோ), ஜெகதீஷ் மெய்டெய் லாய்ஷ்ராம் (66 கிலோ), அருண் குமாா் (73 கிலோ), மோஹித் ஷெராவத் (81 கிலோ), ஜக்தா் சிங் (90 கிலோ), தீபக் தேஸ்வால் (100 கிலோ), யாஷ் கங்காஸ் (100+ கிலோ) ஆகியோா் களம் காண்கின்றனா்.

மகளிா் பிரிவில் ரிது (48 கிலோ), சிம்ரன் (52 கிலோ), லின்தோய் சனம்பம் (57 கிலோ), உன்னதி சா்மா (63 கிலோ), ரெபினா தேவி (70 கிலோ), ரோஷிணி தேவி (78 கிலோ), ஐஷ்ரூப் நரங் (78+ கிலோ) ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com