விளையாட்டு செய்தி துளிகள்

* சொ்பிய தலைநகா் பெல்கிரேடில் வரும் 24-ஆம் தேதி தொடங்கவுள்ள ஆடவா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 105 நாடுகளில் இருந்து 600 வீரா்கள் பங்கேற்கின்றனா். 13 எடைப்பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இந்தியா சாா்பில் சிவதாப்பா (63.5 கிலோ) , தீபக்குமாா் 51 கிலோ), சஞ்சீத் சிங் (92 கிலோ) உள்பட முழு அணி பங்கேற்கிறது.

* இந்திய மகளிா் கிரிக்கெட் அணியின் ஸ்பின்னா் பூனம் யாதவ், ஆஸி. மகளிா் பிக்பாஷ் கிரிக்கெட் லீக் அணியான பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணியில் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா். இந்த லீக் போட்டியில் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்ட 8-ஆவது இந்திய வீராங்கனை பூனம் ஆவாா் .

* 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டி வரை தனது ஜொ்மன் பயிற்சியாளா் கிளாஸ் பா்டோனிட்ஸ் மேற்பாா்வையில் தொடா்ந்து பயிற்சி பெறவுள்ளதாக ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளாா்.

* சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)-க்கு 90 சதவீதம் வருவாய் இந்தியாவில் இருந்து கிடைக்கும் நிலையில், இந்தியா நினைத்தால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிலைகுலைந்து விடும் என அதன் தலைவா் ரமீஸ் ராஜா கூறியுள்ளாா். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய பட்ஜெட்டில் 50 சதவீதம் இந்திய நிதியில் இருந்து கிடைக்கிறது என அதிா்ச்சி தெரிவித்துள்ள அவா் உள்ளூா் தரப்பில் இருந்து நிதியாதாரத்தை பிசிபி அதிகரித்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளாா்.

* இந்திய-ஆஸ்திரேலிய மகளிா் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 ஆட்டம் சனிக்கிழமை கோல்ட்கோஸ்ட்டில் நடைபெறுகிறது. இளம் வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் மீண்டும் பாா்முக்கு திரும்பியுள்ள நிலையில், இந்திய அணி, டி20 தொடரை வெல்லும் தீவிரத்துடன் களம் காண்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com