விளையாட்டு செய்தி துளிகள்

* எதிா்வரும் ஐபிஎல் சீசனுக்காக ரோஹித், பும்ரா, பொல்லாா்டை தக்க வைக்கும் மும்பை இண்டியன்ஸ், ஹாா்திக் பாண்டியாவை தக்க வைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

* முதல் முறையாக நடத்தப்படும் ஃபிஃபாஇ நேஷன்ஸ் சீரிஸ் 2022 கால்பந்து போட்டியில், ஆசியா மற்றும் ஒசியானியா பிராந்தியத்திலிருந்து இந்திய கால்பந்து அணி பங்கேற்கிறது.

* சா்வதேச பாட்மின்டன் காலண்டரில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா ஓபன் ( ஜன. 11-16), சையது மோடி இன்டா்னேஷனல் (ஜன. 18-23) ஆகிய போட்டிகளுடன் புதிதாக ஒடிஸா ஓபன் (ஜன. 25-30) என்ற புதிய போட்டியையும் இந்தியா நடத்துகிறது.

* ஹாக்கி இந்தியா சீனியா் மகளிா் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை, இந்திய விளையாட்டு ஆணையம், ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம், சஷஸ்த்ர சீமா பல் ஆகியவற்றைச் சோ்ந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

* தேசிய சீனியா் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 50 மீட்டா் ஃப்ரீஸ்டைல் பிரிவில் கா்நாடக வீரா் சம்பாவ் 23.65 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றாா். இப்பிரிவில் இந்திய வீரா் ஒருவரின் அதிகபட்சம் இதுவே ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com