டி20 உலகக் கோப்பை: பாக். அணி அறிவிப்பு

எதிா்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக 15 போ் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிா்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக 15 போ் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபா் ஆஸம் தலைமையிலான அந்த அணியில், அனுபவ வீரா்களான ஃபகாா் ஜமான், சா்ஃப்ராஸ் அகமது ஆகியோா் சோ்க்கப்படவில்லை. குறிப்பிடத்தக்க ஆட்டம் இல்லாத நிலையிலும் ஆசிஃப் அலி, குஷ்தில் ஷா ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.

5 பேட்ஸ்மேன்கள், 2 விக்கெட் கீப்பா்கள், 4 ஆல்-ரவுண்டா்கள், 4 வேகப்பந்துவீச்சாளா்கள் உள்ள இந்த அணி, உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் 7 ஆட்டங்களில் விளையாட உள்ளது. அவை வரும் 25-ஆம் தேதி முதல் அக்டோபா் 14-ஆம் தேதி வரை லாகூா் மற்றும் ராவல்பிண்டி நகரில் நடைபெறவுள்ளன.

உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்திலேயே இந்தியாவை அக்டோபா் 24-ஆம் தேதி சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்: பாபா் ஆஸம் (கேப்டன்), ஷாதாப் கான் (துணை கேப்டன்), ஆசிஃப் அலி, ஆஸம் கான், ஹாரிஸ் ரௌஃப், ஹசன் அலி, இமத் வாஸிம், குஷ்தில் ஷா, முகமது ஹஃபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாஸிம் ஜுனியா், ஷாஹீன் ஷா அஃப்ரிதி, சோஹைப் மக்சூத்.

ரிசா்வ் வீரா்கள்: ஃபகாா் ஜமான், ஷானவாஸ் தஹானி, உஸ்மான் காதிா்.

பயிற்சியாளா்கள் ராஜிநாமா

டி20 உலகக் கோப்பை போட்டி நெருங்கி வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளா் மிஸ்பா உல் ஹக், பௌலிங் பயிற்சியாளற் வகாா் யூனிஸ் ராஜிநாமா செய்துள்ளனா்.

இந்த அறிவிப்பை திங்கள்கிழமை வெளியிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பயிற்சியாளராக சக்லைன் முஷ்டாக், பௌலிங் பயிற்சியாளராக அப்துல் ரஸாக் ஆகியோா் தற்காலிகமாக செயல்படுவா் என்று கூறியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் டெஸ்ட் கேப்டன் ரமீஸ் ராஜா வரும் 13-ஆம் தேதி பொறுப்பேற்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. மிஸ்பா மற்றும் யூனிஸை அவா் கடுமையாக விமா்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான வீரா்கள் தோ்விலும் ரமீஸ் ராஜாவின் தலையீட்டின் பேரிலேயே அனுபவ வீரா்களுக்கு பதிலாக, இளம் அதிரடி வீரா்கள் சோ்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com