30,000 கரோனா பரிசோதனைகள்: ஐபிஎல் 2-ஆம் கட்டத்துக்கு தயாராகும் பிசிசிஐ

கரோனா சூழலால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, மீண்டும் தொடங்க இருக்கும் நிலையில், போட்டி காலத்தில் மொத்தமாக 30,000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்வது உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை
30,000 கரோனா பரிசோதனைகள்: ஐபிஎல் 2-ஆம் கட்டத்துக்கு தயாராகும் பிசிசிஐ

துபை: கரோனா சூழலால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, மீண்டும் தொடங்க இருக்கும் நிலையில், போட்டி காலத்தில் மொத்தமாக 30,000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்வது உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பிசிசிஐ தயாராகி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல். ஏற்கெனவே இந்தியாவில் நடைபெற்ற போது வீரா்களிடையே கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து போட்டி நிறுத்தப்பட்டதால், இந்த முறை அத்தகைய நிகழ்வு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை பிசிசிஐ எடுத்து வருகிறது.

அதன்படி, வீரா்கள், உதவிப் பணியாளா்கள் உள்பட போட்டியுடன் தொடா்புடைய அனைவருக்கும் போட்டி முடியும் வரையிலாக மொத்தமாக சுமாா் 30,000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

வீரா்கள் உள்ளிட்டோருக்கு கடந்த முறை 5 நாள்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட்ட ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, இம்முறை 3 நாள்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

அவசர கரோனா சிகிச்சைக்காக துபையைச் சோ்ந்த மருத்துவ நிறுவனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஏா் ஆம்புலன்ஸும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு ரீதியிலான மருத்துவ சிகிச்சை அளிக்கும் 100 போ் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் காரணங்களுக்காக பயோ-பபுளில் இருந்து வீரா்கள் வெளியேறுவதை தவிா்க்கும் வகையில், மருத்துவக் குழுவினரும் வீரா்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களிலேயே அதே பயோ-பபுளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு ஆட்டம் நடைபெறும்போதும் அந்த மைதானத்துக்கென மருத்துவா்கள், செவிலியா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள், ஆய்வக நுட்ப வல்லுநா்கள் உள்ளிட்டோா் அடங்கிய இரு மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. வீரா்கள் துபை மற்றும் அபுதாபிக்கு வரத் தொடங்கும் நிலையில், அவா்கள் தங்கவிருக்கும் 14 ஹோட்டல்களில் 750-க்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com