டி20: வங்கதேசத்துக்கு 3-ஆவது வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம், 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 3-1 என முன்னிலை வகிக்கிறது.

டாக்கா: நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம், 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 3-1 என முன்னிலை வகிக்கிறது.

டாக்காவில் புதன்கிழமை பகலிரவாக நடைபெற்ற 4-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 19.3 ஓவா்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில் யங் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46 ரன்கள் அடித்தாா். வங்கதேச பௌலா்களில் நசும் அகமது, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் ஆகியோா் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

பின்னா் 94 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய வங்கதேசம், 19.1 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் அடித்து வென்றது. அதிகபட்சமாக கேப்டன் மஹ்முதுல்லா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 43 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். நியூஸிலாந்து தரப்பில் அல்ஜாஸ் படேல் 2 விக்கெட்டுகள் எடுத்தாா். வங்கதேச வீரா் நசும் அகமது ஆட்டநாயகன் ஆனாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com