உலகக் கோப்பை தகுதிச்சுற்று: ஐஸ்லாந்தை வீழ்த்தியது ஜெர்மனி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஐரோப்பிய தகுதிச்சுற்றில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வென்றது.
உலகக் கோப்பை தகுதிச்சுற்று: ஐஸ்லாந்தை வீழ்த்தியது ஜெர்மனி


ரெய்க்ஜாவிக்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஐரோப்பிய தகுதிச்சுற்றில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வென்றது. 

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜாவிக் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெர்மனி தரப்பில் செர்கே நர்பி (4-ஆவது நிமிஷம்), அன்டோனியோ ருடிகர் (24), லெரோய் சேன் (56), டிமோ வெர்னர் (88) ஆகியோர் கோலடித்தனர். 

இத்தாலி வெற்றி: "சி' குருப்பில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி 5-0 என்ற கோல் கணக்கில் லிதுவேனியாவை வீழ்த்தியது. 

இந்த ஆட்டத்தில் இத்தாலி தரப்பில் மொய்சே கீன் (11 மற்றும் 29), கியாகோமோ ராஸ்படோரி (24), கியோவானி டி லோரென்úஸô (54) ஆகியோர் கோலடித்தனர். இது தவிர, லிதுவேனிய வீரர் எட்கராஸ் அட்கஸ் 14-ஆவது நிமிஷத்தில் தவறுதலாக "ஓன் கோல்' அடித்தார். 

"இ' பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் பெலாரûஸ தோற்கடித்தது. பெல்ஜியம் தரப்பில் டெனிஸ் பிரேட் 33-ஆவது நிமிஷத்தில் கோலடித்தார். "பி' குரூப் ஆட்டத்தில் ஸ்பெயின் 2-0 என்ற கோல் கணக்கில் கொசோவோவை சாய்த்தது. ஸ்பெயின் அணி தரப்பில் பாப்லோ ஃபார்னல்ஸ் (32), ஃபெரான் டோரஸ் (88) ஆகியோர் கோலடித்தனர். 

இதர ஆட்டங்களில் ஹங்கேரி 2-1 என்ற கோல் கணக்கில் அண்டோராவையும், அல்பேனியா 5-0 என்ற கோல் கணக்கில் சான் மரினோவையும், கிரீஸ் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனையும் வீழ்த்தின. 

இங்கிலாந்து - போலந்து (1-1), வேல்ஸ் - எஸ்டோனியா (0-0), வடக்கு அயர்லாந்து - ஸ்விட்சர்லாந்து (0-0), வடக்கு மாசிடோனியா - ருமேனியா (0-0) ஆகிய அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com