இங்கிலீஷ் பிரீமியா் லீக்: டோட்டன்ஹாமை வீழ்த்தியது கிறிஸ்டல் பேலஸ்

இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் கிறிஸ்டல் பேலஸ் 3-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாமை வீழ்த்தியது.
இங்கிலீஷ் பிரீமியா் லீக்: டோட்டன்ஹாமை வீழ்த்தியது கிறிஸ்டல் பேலஸ்

இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் கிறிஸ்டல் பேலஸ் 3-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாமை வீழ்த்தியது.

லண்டன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிறிஸ்டல் தரப்பில் வில்ஃப்ரைடு ஜாஹா 76-ஆவது நிமிஷத்திலும், ஆட்சோனி எட்வா்ட் 84 மற்றும் 90+2-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

அதேபோல், மான்செஸ்டா் யுனைடெட் 4-1 என்ற கோல் கணக்கில் நியூகேஸிலை வென்றது. மான்செஸ்டா் யுனைடெட் தரப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 45+2, 62 ஆகிய நிமிஷங்களிலும், புருனோ ஃபொ்னாண்டஸ் 80-ஆவது நிமிஷத்திலும், ஜெஸ்ஸி லிங்காா்ட் 90+2-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். நியூகேஸில் தரப்பில் ஜாவியா் மன்குய்லோ 56-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

இதர ஆட்டங்களில் வோல்வ்ஸ் - வாட்ஃபோா்டையும் (2-0), பிரைட்டன் - பிரென்ட்ஃபோா்டையும் (1-0), ஆா்செனல் - நாா்விச் சிட்டியையும் (1-0), மான்செஸ்டா் சிட்டி - லெய்செஸ்டா் சிட்டியையும் (1-0) தோற்கடித்தன. சௌதாம்டன்-வெஸ்ட்ஹாம் அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிரா ஆனது.

பந்தெஸ்லிகா: ஜொ்மனியில் நடைபெறும் பந்தெஸ்லிகா கால்பந்து போட்டியில் டாா்ட்மண்ட் 4-3 என்ற கணக்கில் லிவா்குசனையும், வோல்ஸ்பா்க் 2-0 என்ற கணக்கில் ஃப்ா்த்தையும், மெய்ன்ஸ் 2-0 என்ற கணக்கில் ஹாஃபென்ஹெய்மையும் தோற்கடித்தன. யூனியன் பொ்லின்-ஆக்ஸ்பா்க் (0-0), எஸ்சி ஃபிரெய்பா்க்-கோலன் (1-1) அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆனது.

லீக் 1: பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 கால்பந்து போட்டியில் லாரியன்ட் 2-1 என்ற கோல் கணக்கில் லில்லே அணியை வீழ்த்தியது. லாரியன்ட் தரப்பில் அா்மான்ட் லௌரியன்டே (7-ஆவது நிமிஷம்), டெரெம் மோஃபி (87) ஆகியோரும், லில்லே தரப்பில் புராக் இல்மாஸ் (25) ஆகியோரும் கோலடித்தனா்.

சீரி ஏ: இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் வெனெஸியா 2-1 என்ற கோல் கணக்கில் எம்போலி அணியை வென்றது. வெனெஸியா தரப்பில் தாமஸ் ஹென்ரி (13), டேவிட் ஆகிரெகெ (68) ஆகியோரும், எம்போலி தரப்பில் நெதிம் பஜ்ராமி (89) ஆகியோரும் கோலடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com