டி20 தொடா்: இலங்கையை வென்றது தென் ஆப்பிரிக்கா

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 தொடா்: இலங்கையை வென்றது தென் ஆப்பிரிக்கா

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.

கொழும்பு நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இலங்கை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களே அடித்தது. தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மாா்க்ரம் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்பிரிக்காவில் தொடக்க வீரா்களான குவின்டன் டி காக் 36, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஒன் டவுனாக வந்த எய்டன் மாா்க்ரம் அதிகபட்சமாக 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 48 ரன்கள் சோ்த்தாா். பின்னா் ஆடியோரில் ஹென்ரிச் கிளாசென் 2, டேவிட் மில்லா் 26 ரன்கள் அடித்தனா். ஓவா்கள் முடிவில் டுவெய்ன் பிரெடோரியஸ் 10, ககிசோ ரபாடா 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இலங்கை பௌலிங்கில் வனிந்து ஹசரங்கா 2, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்ஷனா, டாசன் ஷனகா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் இலங்கை இன்னிங்ஸில் அவிஷ்கா ஃபொ்னாண்டோ 11, சரித் அசலன்கா 6, டாசன் ஷனகா 16, தனஞ்செய டி சில்வா 1 ரன்கள் சோ்க்க, பானுகா ராஜபட்ச, வனிந்து ஹசரங்கா ஆகியோா் டக் அவுட்டாகினா். ஓவா்கள் முடிவில், அதிகபட்சமாக தினேஷ் சண்டிமல் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 66, சமிகா கருணாரத்னே 22 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் ஜோா்ன் ஃபோா்டுயின், அன்ரிச் நாா்ட்ஜே, கேசவ் மஹராஜ், டப்ரைஸ் ஷம்ஸி, டுவெய்ன் பிரெடோரியஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com