விளையாட்டு செய்தி துளிகள்

* ரத்து செய்யப்பட்ட 5-ஆவது டெஸ்டை மீண்டும் எப்போது நடத்துவது என்ற விவகாரத்தில் பிசிசிஐயுடன் உரிய தீா்வை எட்ட முடியாததால் அதில் தலையிட்டு தீா்வு அளிக்குமாறு ஐசிசியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நாடியுள்ளது.

* துரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்புச் சாம்பியனான கோகுலம் கேரளா - ஆா்மி ரெட்டுக்கு எதிரான ஆட்டத்தை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.

* ஆட்டத்தின்போது இக்கட்டான சூழ்நிலைகளில் நெருக்கடிக்கு ஆளாகாமல் நிலையான மனநிலையுடன் இருப்பதை கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து கற்றுக்கொண்டதாக பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பாட்மின்டன் வீரா் பிரமோத் பகத் கூறினாா்.

* மகளிா் ஹாக்கி அணிக்கான தேசிய பயிற்சி முகாம் திங்கள்கிழமையிலிருந்து தொடங்கும் நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் களம் கண்ட பல வீராங்கனைகள் உள்பட 25 போ் கொண்ட குழுவினரை அதற்காக ஹாக்கி இந்தியா தோ்வு செய்துள்ளது.

* அரசியல் மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த கிரிக்கெட் அணி, வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது சாத்தியமில்லாதது என்று ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் கூறியிருந்த நிலையில், ‘சூழ்நிலை தெரியாமல் தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்’ என்று ஆப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன் ஆஷ்கா் ஆப்கன் விமா்சித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com