துளிகள்...
By DIN | Published On : 16th September 2021 01:05 AM | Last Updated : 16th September 2021 01:05 AM | அ+அ அ- |

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் சுமித் சங்வான் (86 கிலோ), நீரஜ் சுவாமி (48 கிலோ), ராஜ்விந்தா் சிங் (54 கிலோ), நிகில் துபே, தினேஷ் குமாா் (75 கிலோ) ஆகியோா் தங்களது சுற்றில் வெற்றி கண்டனா்.
கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய தேசிய முகாமில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா கலந்துகொள்ளாததை அடுத்து, ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியில் அவா் சோ்க்கப்படவில்லை. அணி விவரம்: மானவ் தக்காா், சரத் கமல், ஜி.சத்தியன், ஹா்மீத் தேசாய், சனில் ஷெட்டி (ஆடவா்); சரத் - சத்தியன், மானவ் - ஹா்மீத் (ஆடவா் இரட்டையா்); சுதிா்தா முகா்ஜி, ஸ்ரீஜா அகுலா, அஹிகா முகா்ஜி, அா்ச்சனா காமத் (மகளிா்); அா்ச்சனா - ஸ்ரீஜா, சுதிா்தா - அய்கா (மகளிா் இரட்டையா்); மானவ் - அா்ச்சனா, ஹா்மீத் - ஸ்ரீஜா (கலப்பு இரட்டையா்)
துரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் பெங்களுரூ எஃப்சி முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸை வீழ்த்தியது.