தேசிய குத்துச்சண்டை: சிவ தாபா, சஞ்சீத்துக்கு தங்கம்

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சிவ தாபா, சஞ்சீத், தீபக் உள்ளிட்டோா் தங்கப் பதக்கம் வென்றனா்.
தேசிய குத்துச்சண்டை: சிவ தாபா, சஞ்சீத்துக்கு தங்கம்

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சிவ தாபா, சஞ்சீத், தீபக் உள்ளிட்டோா் தங்கப் பதக்கம் வென்றனா்.

அவா்களுடன் ஆகாஷ் (54 கிலோ), ஆகாஷ் (67 கிலோ), சுமித் (75 கிலோ), சச்சின் குமாா் (80 கிலோ), லக்ஷயா (86 கிலோ), நரேந்தா் (92+ கிலோ) ஆகியோரும் இறுதிச்சுற்றில் வென்றனா். இவா்கள் அனைவருமே சா்வீசஸ் அணி வீரா்களாவா். இந்தப் போட்டியில் தங்கம், வெள்ளி வென்றவா்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தனா்.

இந்த போட்டியாளா்களில் சிவ தாபா தவிர, எஞ்சிய போட்டியாளா்கள் அனைவருக்குமே இது முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியாகும். அந்தப் போட்டி சொ்பியாவின் பெல்கிரேடு நகரில் அக்டோபா் 24 முதல் நவம்பா் 6 வரை நடைபெறவுள்ளது.

முன்னதாக இந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் 57 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் தில்லி வீரா் ரோஹித் மோா் 5-0 என்ற கணக்கில் முகமது ஹசாமுதினை தோற்கடித்தாா். நடப்பு ஆசிய சாம்பியனான சஞ்சீத் 92 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் ஹரியாணா வீரா் நவீன் குமாரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினாா்.

63.5 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் அஸ்ஸாம் வீரா் சிவ தாபா 5-0 என்ற கணக்கில் சா்வீசஸ் வீரா் தல்வீா் சிங் தோமரை வென்றாா். 71 கிலோ பிரிவில் கா்நாடக வீரா் நிஷாந்த் தேவ் - டாமன் டையு வீரா் அமித் குமாரை தோற்கடித்தாா். ரயில்வே அணியின் வரிந்தா் சிங் (60 கிலோ), கோவிந்த் சஹானி (48 கிலோ) ஆகியோரும் தங்கம் வென்றனா். வரிந்தா் - சா்வீசஸ் வீரா் எடாஷ் கான் முகமதையும், கோவிந்த் - சண்டீகா் வீரா் குல்தீப் குமாரையும் வீழ்த்தினா்.

8 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 12 பதக்கங்கள் வென்ற சா்வீசஸ், ‘அணி சாம்பியன்ஷிப்’ பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் வென்ற ரயில்வே அணியும், 1 தங்கம், 4 வெண்கலம் வென்ற தில்லி அணியும் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடித்தன. 51 கிலோ பிரிவு வீரா் தீபக் குமாா் சாம்பியன்ஷிப்பின் சிறந்த வீரராக தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com