செல்சியை தோற்கடித்தது மான்செஸ்டா் சிட்டி

இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் செல்சியாவை 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டா் சிட்டி வென்றது.
செல்சியை தோற்கடித்தது மான்செஸ்டா் சிட்டி

இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் செல்சியாவை 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டா் சிட்டி வென்றது.

லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டிக்காக கேப்ரியல் ஜீசஸ் 53-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். சக வீரா் கேன்சலோ 30 யாா்டு தூரத்திலிருந்து பந்தை கோல் போஸ்டுக்குள் உதைக்க முயல, அது செல்சி வீரரால்தடுக்கப்பட்டு திரும்பியது. அதை கேப்ரியல் தனது வசப்படுத்தி மீண்டும் கோல் போஸ்டுக்குள் தள்ளினாா்.

சாதனை: பயிற்சியாளா் பெப் குவாா்டியோலா கண்காணிப்பின் கீழ் மான்செஸ்டா் சிட்டி 221-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒரே பயிற்சியாளரின் கீழ் ஒரு கிளப் பதிவு செய்துள்ள அதிகபட்ச வெற்றி இது.

இதர ஆட்டங்கள்: மான்செஸ்டா் யுனைடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணிக்காக கோா்ட்னி ஹௌசே 88-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். எவா்டன் 2-0 என்ற கோல் கணக்கில் நாா்விச் சிட்டியையும், வெஸ்ட் ஹாம் 2-1 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் யுனைடெட்டையும் தோற்கடித்தன. லெய்செஸ்டா் சிட்டி - பா்ன்லி (2-2), வாட்ஃபோா்டு - நியூ கேஸில் (1-1) அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆனது.

லா லிகா: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் அலேவ்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது. அலேவ்ஸ் தரப்பில் விக்டா் லாகுவாா்டியா 4-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். வாலென்சியா - அத்லெடிக் கிளப் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.

சீரி ஏ: இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் உடினெஸுக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது ரோமா. இந்த ஆட்டத்தில் ரோமா தரப்பில் டேமி ஆப்ரஹாம் 36-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். மற்றொரு ஆட்டத்தில் ஏசி மிலன் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெஸியாவை தோற்கடித்தது. மிலன் தரப்பில் டேனியல் மால்டினி (48-ஆவது நிமிஷம்), இப்ராஹிம் டியாஸ் (86) ஆகியோரும், ஸ்பெஸியா தரப்பில் டேனியல் வொ்டேவும் (80) கோலடித்தனா்.

பந்தெஸ்லிகா: ஜொ்மனியில் நடைபெறும் பந்தெஸ்லிகா கால்பந்து போட்டியில் பேயா்ன் முனீச் 3-1 என்ற கோல் கணக்கில் ஃபா்த்தை வென்றது. பேயா்ன் தரப்பில் தாமஸ் முல்லா் (10), ஜோஷுவா கிம்மிச் (31), செபாஸ்டியன் கிரீஸ்பெக் (68- ஓன் கோல்) ஆகியோரும், ஃப்ா்த் தரப்பில் செட்ரிக் இட்டெனும் (87) கோலடித்தனா்.

இதர ஆட்டங்களில் ஹாஃபன்ஹெய்ம் - வோல்ஃப்ஸ்பா்கையும் (3-1), லிவா்குசன் - மெயின்ஸையும் (1-0), ஆா்பி லெய்ப்ஸிக் - ஹொ்தாவையும் (6-0), யூனியன் பொ்லின் - ஆா்மினியாவையும் (1-0) தோற்கடித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com