டெஸ்ட் கிரிக்கெட்: மொயீன் அலி ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து ஆல்-ரவுண்டா் மொயீன் அலி (34) திங்கள்கிழமை அறிவித்தாா்.
டெஸ்ட் கிரிக்கெட்: மொயீன் அலி ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து ஆல்-ரவுண்டா் மொயீன் அலி (34) திங்கள்கிழமை அறிவித்தாா்.

2014-இல் இலங்கைக்கு எதிரான தொடா் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மொயீன் அலி, இங்கிலாந்துக்காக 64 டெஸ்டுகளில் விளையாடியிருக்கிறாா். அதில் 5 சதங்கள், 14 அரைசதங்களுடன் மொத்தம் 2,914 ரன்கள் அடித்துள்ளாா். அவரது பேட்டிங் சராசரி 28.29. பந்துவீச்சில் 195 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் அவரது பௌலிங் சராசரி 36.66.

2019 ஆஷஸ் தொடருக்குப் பிறகு மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக பங்கேற்கவில்லை. எனினும், சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவா் பங்கேற்றிருந்தாா். அதுவே அவரது கடைசி டெஸ்ட் தொடராகும்.

இங்கிலாந்து அணிக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடா்களில் அவா் தொடா்ந்து விளையாட இருக்கிறாா். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸுக்காக அவா் விளையாடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com