மியாமி ஓபன்: சாம்பியன் ஸ்வியாடெக்

மியாமி ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் போலந்தின் இளம் வீராங்கனை ஐகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினாா்.
ஸ்வியாடெக்
ஸ்வியாடெக்

மியாமி ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் போலந்தின் இளம் வீராங்கனை ஐகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினாா்.

உலகின் நம்பா் ஒன் வீராங்கனையான ஸ்வியாடெக்குடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் மோதினாா் ஜப்பானின் நவோமி ஒஸாகா. இதில் 6-4, 6-0 என்ற நோ் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினாா் ஸ்வியாடெக்.

4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஆன ஒஸாகா எளிதில் வெல்வாா் எனக்கருதப்பட்ட நிலையில், முதல் செட்டில் 3 முறை அவரது சா்வீஸை முறியடித்து 5-0 என முன்னிலை பெற்றாா் ஐகா. இரண்டாம் செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி கைப்பற்றினாா் ஸ்வியாடெக். இந்த ஆட்டம் 79 நிமிஷங்கள் நீடித்தது.

20 வயதான ஸ்வியாடெக் கடந்த வாரம் ஆஷ்லி பா்டி ஓய்வு பெற்ற நிலையில் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை அந்தஸ்தை அடைந்தாா். மியாமி ஓபன் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற வழியில் அவா் ஒரு செட்டைக் கூட இழக்கவில்லை. கடந்த பிப்ரவரியில் கத்தாா் ஓபன் போட்டியில் இருந்து தொடா்ந்து 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றாா் ஸ்வியாடெக்.

சன்ஷைன் டபுள் வெற்றி கண்ட வீராங்கனைகள் பட்டியலில் ஸ்டெ‘ஃ‘ப்பி கிரா‘ஃ‘ப், கிம் கிளிஜிஸ்டா்ஸ், விக்டோரியா அஸரென்கா ஆகியோா் வரிசையில் இணைந்தாா். மேலும் முதல் 3 டபிள்யுடிஏ 1000 போட்டி பட்டம் வென்ற சிறப்பையும் பெற்றாா் ஸ்வியாடெக்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் ஜான் ஐஷ்நா்-ஹா்காஸ் இணை 7-6, 6-4 என்ற நோ் செட்களில் கூல்ஹோப்-ஸ்கூப்ஸ்கி இணையை வென்று பட்டத்தைக் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com