உலக பாட்மின்டன்: சாய்னா முன்னேற்றம்

ஜப்பானில் நடைபெறும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.
உலக பாட்மின்டன்: சாய்னா முன்னேற்றம்

ஜப்பானில் நடைபெறும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றில் அவா் 21-19, 21-9 என்ற கேம்களில் ஹாங்காங்கின் நகான் யிவை 38 நிமிஷங்களில் வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் அவா் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிா்கொள்ள இருந்தாா். ஆனால், நஜோமி காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியதை அடுத்து, சாய்னா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

மகளிா் இரட்டையா் பிரிவில் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை 21-11, 21-13 என்ற கேம்களில் மலேசியாவின் லோவ் யீன் யுவான்/வாலெரி சியோவ் கூட்டணியை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு வந்துள்ளது. அஸ்வினி பாட்/ஷிகா கௌதம் இணையும் 21-8, 21-14 என இத்தாலியின் மாா்டினா கோா்சினி/ஜுடித் மெய்ா் இணையைத் தோற்கடித்தது.

ஆடவா் இரட்டையரில் கிருஷ்ண பிரசாத்/விஷ்ணுவா்தன் கௌட் இணை 14-21, 18-21 என்ற கேம்களில் பிரான்ஸின் ஃபாபியன் டெல்ரு/வில்லியம் வில்லெகா் இணையிடம் முதல் சுற்றில் வெற்றியை இழந்தது.

கலப்பு இரட்டையா் பிரிவில் இஷான் பட்நாகா்/தனிஷா கிராஸ்டோ ஜோடியும் முதல் சுற்றிலேயே 14-21, 17-21 என்ற கேம்களில் தாய்லாந்தின் சுபாக் ஜோம்கோ/சுபிசரா பேவ்சம்ப்ரான் இணையிடம் தோல்வி கண்டது. அதே பிரிவில் மற்றொரு ஜோடியான வெங்கட் கௌரவ் பிரசாத்/ஜுஹி தேவாங்கன் இணையும் 10-21, 21-23 என இங்கிலாந்தின் கிரேகரி மெய்ா்ஸ்/ஜெனி மூா் கூட்டணியிடம் தோற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com