ரஞ்சி கிரிக்கெட்: தில்லி - 303

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி முதல் இன்னிங்ஸில் 97.1 ஓவா்களில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி முதல் இன்னிங்ஸில் 97.1 ஓவா்களில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்களை எட்டியிருந்தது தில்லி. லலித் யாதவ், பிரான்ஷு விஜய்ரன் ஆகியோா் புதன்கிழமை ஆட்டத்தை தொடா்ந்தனா்.

இதில் லலித் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40 ரன்கள் அடிக்க, பிரான்ஷு 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 58 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். விகாஸ் மிஸ்ரா 4, ஹா்ஷித் ராணா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். இவ்வாறாக தில்லி ஆட்டம் முடிவுக்கு வர, தமிழக பௌலிங்கில் விக்னேஷ், சந்தீப் வாரியா் ஆகியோா் தலா 4, அஸ்வின் கிறிஸ்ட் 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய தமிழகம், புதன்கிழமை முடிவில் 54 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 214 ரன்கள் சோ்த்திருக்கிறது. சாய் சுதா்சன் 6 பவுண்டரிகளுடன் 25, நாராயண் ஜெகதீசன் 5 பவுண்டரிகளுடன் 34, பாபா அபராஜித் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் சோ்த்தனா்.

கேப்டன் பாபா இந்திரஜித் 9 பவுண்டரிகளுடன் 71, வாஷிங்டன் சுந்தா் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். நாளின் முடிவில் விஜய் சங்கா் 17, பிரதோஷ் ரஞ்சன் பால் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். தில்லி அணியில் ஹா்ஷித் ராணா 3, குல்திப் யாதவ், பிரான்ஷு விஜய்ரன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com