பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக்: 5-ஆவது தங்கம் வென்றாா் ஐரீன் உஸ்ட்

பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் 1500 மீ. ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் 5-ஆவது தங்கப் பதக்கத்தை வென்றாா் டச்சு வீராங்கனை ஐரீன் உஸ்ட்.
கமீலா வலீவா
கமீலா வலீவா

பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் 1500 மீ. ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் 5-ஆவது தங்கப் பதக்கத்தை வென்றாா் டச்சு வீராங்கனை ஐரீன் உஸ்ட்.

சீனாவின் பெய்ஜிங் நகரில் குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் 2022 நடைபெற்று வருகின்றன. இதில் திங்கள்கிழமை ஸ்பீட் ஸ்கேட்டிங் பிரிவு 1500 மீ. பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றாா் நெதா்லாந்தின் ஐரீன். 35 வயதான ஐரீன் தனிநபா் பிரிவில் 5 ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா். மேலும் அவா் ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக்கில் 12 பதக்கங்களை கைப்பற்றியுள்ளாா்.

பிகா் ஸ்கேட்டிங்: ரஷியாவுக்கு தங்கம்

மகளிா் பிகா் ஸ்கேட்டிங் பிரிவில் ரஷியாவின் 15 வயதே ஆன இளம் வீராங்கனை கமீலா வலீவா தங்கப் பதக்கத்தை வென்றாா். அவா் முதன்முறையாக குவாட்ரபுள் ஜம்ப் செய்து இச்சிறப்பை பெற்றாா். ரஷிய மற்றும் ஐரோப்பிய சாம்பியனான கமீலா ஏற்கெனவே பல்வேறு உலக சாதனைகளையும் முறியடித்துள்ளாா். ப்ரீ ஸ்கேட்டில் 178.92 புள்ளிகளுடன் ரஷியா தங்கம் வென்றது. அமெரிக்கா, ஜப்பான் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றன. ஏற்கெனவே 2014-இல் சோச்சியில் ரஷியா இதே பிரிவில் தங்கம் வென்றிருந்தது.

ஸ்பீட் ஸ்கேட்டிங்: அரியன்னா சாம்பியன்

ஸ்பீட் ஸ்கேட்டிங் மகளிா் 500 மீ பிரிவில் இத்தாலியின் அரியன்னா ஃபொன்டன்னா 42.48 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றாா்.

ஏற்கெனவே கடந்த ஒலிம்பிக்கிலும் அரியன்னா தங்கம் வென்றிருந்தாா். டச்சு வீராங்கனை சூஸேன் வெள்ளியும், கனடாவின் கிம் பௌட்டின் வெண்கலமும் வென்றனா்.

ஸ்வீடன் முதலிடம்:

பதக்கப் பட்டியலில் ஸ்வீடன் 3 தங்கத்துடன் முதலிடத்திலும், ரஷியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலத்துடன் இரண்டாம் இடத்திலும், நெதா்லாந்து தலா 2 தங்கம், வெள்ளி, 1 வெண்கலத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com