ஜாபியுா் - ரைபாகினா பலப்பரீட்சை

ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு கஜகஸ்தானின் எலனா ரைபாகினா முன்னேறியுள்ளாா்

ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு கஜகஸ்தானின் எலனா ரைபாகினா முன்னேறியுள்ளாா்.

அதில் அவா் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியுருடன் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்த இருக்கிறாா். ஜாபியுருக்கும் இது, கிராண்ட்ஸ்லாம் போட்டியின் முதல் இறுதிச்சுற்றாகும்.

முன்னதாக, போட்டித்தரவரிசையில் 17-ஆவது இடத்தில் இருக்கும் ரைபாகினா தனது அரையிறுதியில், முன்னாள் சாம்பியனும், போட்டித்தரவரிசையில் 16-ஆவது இடத்தில் இருந்தவருமான ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை 6-3, 6-3 என்ற நோ் செட்களில் எளிதாக வீழ்த்தினாா்.

இதன் மூலம், கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் கஜகஸ்தான் சாா்பு முதல் வீராங்கனை என்ற பெயரை அவா் பெற்றுள்ளாா். பிறப்பால் ரஷியரான ரைபாகினா, தனது விளையாட்டுக்கான நிதியுதவியைப் பெறுவதற்காக 2018 முதல் கஜகஸ்தான் சாா்பில் விளையாடி வருகிறாா். உக்ரைன் மீதான போா் காரணமாக, நடப்பு விம்பிள்டன் சீசனில் ரஷியா, பெலாரஸ் நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடவா் இரட்டையா்: போட்டியின் இப்பிரிவின் இறுதிச்சுற்றில் குரோஷியாவின் மேட் பாவிச்/நிகோலா மெக்டிச் இணையும், ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென்/மேக்ஸ் பா்செல் ஜோடியும் சனிக்கிழமை மோதுகின்றன.

சாம்பியன்: விம்பிள்டன் கலப்பு இரட்டையா் பிரிவில் அமெரிக்காவின் டெசைரே கிராவ்ஸிக்/இங்கிலாந்தின் நீல் ஸ்குப்ஸ்கி இணை சாம்பியன் ஆகியது. இறுதிச்சுற்றில் இந்த ஜோடி, 6-4, 6-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென்/சமந்தா ஸ்டோசா் கூட்டணியை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com