டெவோன் கான்வே ஆட்டமிழந்ததற்கு வருத்தம் தெரிவித்த வார்னர்

இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் ஆட்டமிழந்த நியூசிலாந்தின் டெவோன் கான்வேக்கு, ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் வருத்தம் தெரிவித்துள்ளார். 
படம்: இன்ஸ்டாகிராம், டேவிட் வார்னர் | ஸ்டூவர்ட் பிராட்
படம்: இன்ஸ்டாகிராம், டேவிட் வார்னர் | ஸ்டூவர்ட் பிராட்

இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் ஆட்டமிழந்த நியூசிலாந்தின் டெவோன் கான்வேக்கு, ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் வருத்தம் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து-நியூசிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூன்-2)  தொடங்கியது. இதில் இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய முதல் பந்திலே நியூசிலாந்தின் டெவோன் கான்வே ஆட்டமிழந்தார். 

“டெவோன் கான்வே உன்னுடைய வலி எனக்கு புரிகிறது” என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வார்னர் பதிவிட்டது பிரபலாமனது. 

வார்னர் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? காரணம் இருக்கிறது. 

2019 ஆஸஷ் தொடரில் 10 இன்னிங்ஸில் 7 முறையும் வார்னர் பிராட்டிடமே  ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடரில் 10 இன்னிங்ஸிலும் சேர்த்து 95 ரன்களே எடுத்தார். எனவே ப்ராட் ஓவர் அவருக்கும் கடினமாக இருந்தது என்பதை ஆறுதலாகவும் சுய எள்ளலாகவும் வார்னர் வெளிப்படுத்தியது கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசுபொருளானது. 

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 132க்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து 116க்கு 7 விக்கெட்டுகளுடன் இரண்டாம்நாள் ஆட்டத்தை தொடர இருக்கிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com