சைனி, செளரப் குமார் அபார பந்துவீச்சு: 112 ரன்களுக்குச் சுருண்ட வங்கதேச ஏ அணி

இந்திய ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் வங்கதேச அணி 45 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. 
சைனி, செளரப் குமார் அபார பந்துவீச்சு: 112 ரன்களுக்குச் சுருண்ட வங்கதேச ஏ அணி

இந்திய ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் வங்கதேச அணி 45 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. 

டிசம்பர் மாதம் இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 4 முதல் தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது. 2-வது டெஸ்ட் டிசம்பர் 6 அன்று தொடங்குகிறது. இந்திய ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக செளராஷ்டிர முன்னாள் வீரர் ஷிதான்சு கொடாக்கும் டிராய் கூலி, வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் டி. திலீப்,ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

காக்ஸ் பஸாரில் தொடங்கிய முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய ஏ அணி சிறப்பாகப் பந்துவீசியதால் முதல் 5 விக்கெட்டுகள் 26 ரன்களுக்கு வீழ்ந்தன. இதன்பிறகு மொசாடெக் ஹுசைன் பொறுப்பாக விளையாடி 63 ரன்கள் சேர்த்தார். எனினும் வங்கதேச ஏ அணி, 45 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெஸ்ட் தொடரில் ஜடேஜா இடம்பெற முடியாமல் போனால் அவருக்குப் பதிலாக விளையாடவுள்ள 29 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளர் செளரப் குமார் 4 விக்கெட்டுகளையும் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ராகுல் டிராவிடுடன் இணைந்து டிசம்பர் 1 அன்று வங்கதேசத்துக்குப் புறப்பட்டுச் செல்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் டிசம்பர் 14 அன்றும் 2-வது டெஸ்ட் டிசம்பர் 22 அன்றும் தொடங்கவுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com