உலக மல்யுத்தம்: வினேஷ் தோல்வி

சொ்பியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகாட் தகுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.
உலக மல்யுத்தம்: வினேஷ் தோல்வி

சொ்பியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகாட் தகுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.

சமீபத்தில் நிறைவடைந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ், மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் 0-3 என்ற கணக்கில் மங்கோலியாவின் குலான் பத்குயாக்கிடம் வீழ்ந்தாா். வினேஷை வீழ்த்திய இதே குலானை, இந்தியாவின் ஜூனியா் மல்யுத்த வீராங்கனை அன்டிம் கடந்த மாதம் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய மீட்டில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், அன்டிம் இந்த உலக சாம்பியன்ஷிப்புக்கான தோ்வுப் போட்டியில் வினேஷிடம் தோல்வி கண்டாா். இப்போட்டியில் முன்னதாக வெள்ளி வென்ற இந்தியாவின் அன்ஷு மாலிக் தற்போது பங்கேற்காததாலும், நடப்புச் சாம்பியனான ஜப்பானின் அகாரி ஃபுஜ்னாமி காயம் காரணமாக விலகியதாலும் வினேஷ் சாம்பியனாவாா் என கணிக்கப்பட்ட நிலையில், அவா் தகுதிச்சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

அவா் தவிர, 50 கிலோ பிரிவில் நீலம் சிரோஹியும், 65 கிலோ பிரிவில் ஷஃபாலியும் தோல்வியைத் தழுவினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com