மியாமி ஓபன் டென்னிஸ்: ஒசாகாவை வீழ்த்தி இகா ஸ்வியாடெக் சாம்பியன்
By DIN | Published On : 03rd April 2022 06:32 PM | Last Updated : 03rd April 2022 06:32 PM | அ+அ அ- |

அமெரிக்காவின் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் ஜப்பானின் நவோமி ஒசாகாவை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார்.
அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையரில் நேற்று இரவு நடந்த இறுதி போட்டியில் போலந்து நாட்டின் 20 வயதான இகா ஸ்வியாடெக், ஜப்பானின் 24 வயதான நவோமி ஒசாகாவுடன் மோதினார்.
தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஒசாகா பின்னர் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ஸ்வியாடெக் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் ஒரு புள்ளி கூட எடுக்கவிடாமல், ஸ்வியாடெக் அதிரடி காட்டினார். இதனால் இரண்டாவது செட்டையும் 6-0 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.
இதன்மூலம் 17வது முறையாக மியாமி ஓபன் டென்னிஸ் தொடரை ஸ்வியாடெக் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இது தொடர்ச்சியாக அவர் பெற்ற 17வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...