மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதியில் சிட்சிபாஸ்

மான்டி-கார்லோ மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ், அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். 
மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதியில் சிட்சிபாஸ்

மொனாகோ: மான்டி-கார்லோ மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ், அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். 
போட்டித்தரவரிசையில் 3-ஆவது இடத்திலிருக்கும் சிட்சிபாஸ் 7-5, 7-6 (7/1) என்ற செட்களில் செர்பியாவின் லாஸ்லோ டெரெவை வீழ்த்தினார். 10-ஆவது இடத்திலிருக்கும் ஃபிரிட்ஸ் 7-6 (7/4), 7-5 என்ற செட்களில் சக அமெரிக்கரான செபாஸ்டியன் கோர்டாவை தோற்கடித்தார். பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 7-5 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த நார்வே வீரர் கேஸ்பர் ரூடை வென்றார். 
12-ஆவது இடத்திலிருக்கும் ஆர்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வார்ட்ஸ்மேன் 2-6, 6-4, 6-3 என்ற செட்களில் இத்தாலியின் லோரென்úஸா முசெட்டியை வீழ்த்தினார். ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச் ஃபாகினோ 6-4, 6-1 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் டேவிட் காஃபினை தோற்கடித்தார். 
காலிறுதியில் போபண்ணா ஜோடி: இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/இங்கிலாந்தின் ஜேமி முர்ரே இணை 6-4, 6-7 (7/9), 10-7 என்ற செட்களில் அமெரிக்க ஜோடியான டெய்லர் ஃப்ரிட்ஸ்/செபாஸ்டியன் கோர்டாவை தோற்கடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com