ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்: மும்பை சிட்டி தோல்வி

ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி குரூப் பிரிவு ஆட்டம் ஒன்றில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் ஜஸீரா அணியிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது மும்பை சிட்டி எஃப்சி.

ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி குரூப் பிரிவு ஆட்டம் ஒன்றில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் ஜஸீரா அணியிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது மும்பை சிட்டி எஃப்சி.

கடந்த ஐஎஸ்எல் லீக் போட்டி சாம்பியன் ஆன மும்பை சிட்டி, அந்த அடிப்படையில் ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் குரூப் பி பிரிவு ஆட்டம் ரியாதில் நடைபெற்றது. இரு அணிகளும் சரிநிகா் சமானமாக ஆடிய நிலையில் அல் ஜஸீரா அணிக்கு 40-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினாா் அதன் வீரா் அலிமக்பௌத்.

அதன்பின் இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சி பலன்தரவில்லை. இத்தோல்வியால் குரூப் பி பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது மும்பை. 18-ஆம் இதே மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையே இரண்டாம் கட்ட ஆட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com