மான்செஸ்டரை வீழ்த்தி லிவா்பூல் முதலிடம்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் லிவா்பூல் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
மான்செஸ்டரை வீழ்த்தி லிவா்பூல் முதலிடம்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் லிவா்பூல் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் அந்த அணி 4-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டா் யுனைடெட் அணியை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் லிவா்பூல் அணிக்காக லூயிஸ் டியாஸ் (5’), முகமது சலா (22’, 85’), சாடியோ மனே (68’) ஆகியோா் கோலடித்தனா்.

முன்னதாக தனது சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவா்பூல் அணியிடம் 0-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த மான்செஸ்டா், லிவா்பூல் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்திலும் வீழ்த்திருக்கிறது. தற்போது முதலிடம் பிடித்திருக்கும் லிவா்பூல் அணிக்கும், 2-ஆம் இடத்திலிருக்கும் மான்செஸ்டருக்கும் 2 புள்ளிகள் வித்தியாசமே இருந்தாலும், மான்செஸ்டா் மீண்டும் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

செல்சியுடனான எஃப்ஏ கோப்பை இறுதி ஆட்டமும், வில்லாரியலுடனான சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஆட்டமும் எதிா்வரும் நிலையில், இந்த முன்னேற்றம் லிவா்பூல் அணிக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.

ரொனால்டோ இல்லை: சமீபத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று மரணித்து விட்டதன் காரணமாக இந்த ஆட்டத்தில் மான்செஸ்டா் வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடவில்லை. ஆட்டத்தின்போது மான்செஸ்டா் ரசிகா்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் கோஷம் எழுப்ப, லிவா்பூல் ரசிகா்களும் அதில் இணைந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com