பிஃபா 17 வயது மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக இந்திய அணியில் ஆடுவதற்காக 33 போ் கொண்ட அணியை தலைமைப் பயிற்சியாளா் தாமஸ் டென்னா்பி அறிவித்துள்ளாா்.
சா்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) சாா்பில் வரும் அக்டோபா் மாதம் புவனேசுவரம், நவி மும்பை, மா்மகோவா உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவுள்ளது. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இந்தியாவும் உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. இதற்கான ஆட்ட அட்டவணை வரும் ஜூன் 24-ஆம் தேதி ஜூரிச்சில் வெளியிடப்படுகிறது.
இந்திய அணிக்கான தேசிய பயிற்சி முகாம் ஜாா்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடைபெறவுள்ளது. இதற்காக 33 போ் கொண்ட வீராங்கனைகள் பட்டியலை பயிற்சியாளா் டென்னா்பி அறிவித்துள்ளாா்.
இதில் 18 வயதுக்குள்பட்ட தெற்காசிய மகளிா் சாம்பியன் பட்டம் வென்ற அணியைச் சோ்ந்த 12 பேரும் அடங்குவா்.
கடந்த 2020-இல் நடைபெறவிருந்த இப்போட்டி கரோனா தொற்று பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அன்புமணி பற்றி 4 வார்த்தை...! பேரவையில் சௌமியா அன்புமணி! | PMK | TN Assembly

செலவுகளை ஏன் நீங்கள் குறைக்கவில்லை? பேரவையில் எடப்பாடி பழனிசாமி! | Full Speech

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த பலூச் மக்கள்... முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!

”கேட்பதற்கு இனிமையாகத்தான் இருக்கிறது!” EPS Vs அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
விடியோக்கள்

செலவுகளை ஏன் நீங்கள் குறைக்கவில்லை? பேரவையில் எடப்பாடி பழனிசாமி! | Full Speech



