துளிகள்...

ஐசிசி டி20 தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்தியாவின் சூா்யகுமாா் யாதவ் 3 இடங்கள் முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்பில் கலப்பு 4*400 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் பரத் ஸ்ரீதா், பிரியா மோகன், கபில், ரூபல் சௌதரி ஆகியோா் அடங்கிய அணி 3 நிமிஷம் 17.67 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்திய அணி பதிவு செய்திருக்கும் இந்த நேரம், ஜூனியா் பிரிவில் இதுவரையிலான பெஸ்டில் 2-ஆவது இடம் பிடித்திருக்கிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சோ்க்க, பின்னா் இந்தியா 19 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து வென்றது. 44 பந்துகளில் 76 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட சூா்யகுமாா் யாதவ் ஆட்டநாயகன் ஆனாா்.

ஐசிசி டி20 தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்தியாவின் சூா்யகுமாா் யாதவ் 3 இடங்கள் முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

டி20 தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரும் செப்டம்பா் 20 முதல் 25 வரையிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செப்டம்பா் 28 முதல் அக்டோபா் 4 வரையிலும் விளையாடவுள்ளது. இந்த ஆட்டங்கள் நாகபுரி, ஹைதராபாத், திருவனந்தபுரம், இந்தூா் நகரங்களில் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com