சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: கோரிச், கார்சியா சாதனை சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் குரோஷியாவின் போர்னா கோரிச், மகளிர் பிரிவில் பிரான்ஸின் கரோலின் கார்சியா சாம்பியன் பட்டம் வென்றனர்.
சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: கோரிச், கார்சியா சாதனை சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் குரோஷியாவின் போர்னா கோரிச், மகளிர் பிரிவில் பிரான்ஸின் கரோலின் கார்சியா சாம்பியன் பட்டம் வென்றனர். இப்போட்டியில் இருவருமே கோப்பை வென்றது இது முதல் முறையாகும். 

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் போர்னா கோரிச், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாûஸ எதிர்கொண்டார். இருவருமே இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு வந்திருந்தது இது முதல் முறை. விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தச் சுற்றில் கோரிச் 7-6 (7/0), 6-2 என்ற செட்களில் சிட்சிபாûஸ வீழ்த்தினார். 

இத்துடன் இருவரும் 3 முறை நேருக்கு நேர் சந்தித்த நிலையில், கோரிச் 2-1 என முன்னிலை பெற்றிருக்கிறார். 

வெற்றிக்குப் பிறகு பேசிய கோரிச், "உண்மையில், பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. இது நம்பமுடியாத உணர்வாக உள்ளது. நன்றாக விளையாடுவதற்கு கடினமாகப் பயிற்சி எடுத்திருந்தேன் என்றாலும், இவ்வாறு சாம்பியன் கோப்பை வெல்லும் அளவுக்கு விளையாடியது எனக்கே ஆச்சர்யமளிப்பதாக இருந்தது' என்றார். கோரிச்சின் டென்னிஸ் கேரியரில் இது அவரது 3-ஆவது சாம்பியன் பட்டமாகும். 

கடந்த ஆண்டு முழுவதும் தோள்பட்டை காயம் காரணமாக சிகிச்சை மற்றும் ஓய்விலிருந்த கோரிச், இந்த ஆண்டு மார்ச் முதல் களம் கண்டு தற்போது மாஸ்டர்ஸ் போட்டியில் வாகை சூடி அசத்தியிருக்கிறார். இந்த முயற்சியின்போது ஸ்பெயினின் ரஃபேல் நடால் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் 5 பேரையும் அவர் சாய்த்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com