உலகக் கோப்பை: நாக் அவுட் சுற்றுகளின் அட்டவணை

காலிறுதி ஆட்டங்கள் டிசம்பர் 9, 10 தேதிகளிலும் அரையிறுதிச்சுற்று டிசம்பர் 13, 14 தேதிகளிலும்...
உலகக் கோப்பை: நாக் அவுட் சுற்றுகளின் அட்டவணை

2022 கால்பந்து உலகக் கோப்பையில் இன்று முதல் நாக் அவுட் சுற்றுகள் தொடங்குகின்றன.

நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் போர்ச்சுகலை தென் கொரியா 2-1 எனவும் கானாவை உருகுவே 2-0 எனவும் ஸ்விட்சர்லாந்து செர்பியாவை 3-2 எனவும் கேமரூன் பிரேஸிலை 1-0 எனவும் வீழ்த்தின. இதையடுத்து நேற்றைய ஆட்டங்களின் முடிவில் ஸ்விட்சர்லாந்தும் தென் கொரியாவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. கூடுதலாக ஒரு கோல் அடித்திருந்தால் உருகுவே தகுதி பெற்றிருக்கும். இதனால் வெற்றி பெற்றும் அந்த அணியால் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

பிரேஸிலும் போர்ச்சுகலும் தங்களுடைய பிரிவில் முதலிடத்தைப் பிடித்தாலும் கடைசி ஆட்டத்தில் தோற்றுள்ளன. பிரேஸிலைத் தோற்கடித்தாலும் கேமரூன் அணியால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. 

இந்நிலையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட வேண்டிய 16 அணிகளும் முடிவு செய்யப்பட்டுள்ளன. 

பிரான்ஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து, போலந்து, ஸ்பெயின், குரோசியா, போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, மொராக்கோ, செனகல், அர்ஜென்டீனா, பிரேஸில், அமெரிக்கா.

ஜெர்மனி, பெல்ஜியம், உருகுவே, டென்மார்க் உள்ளிட்ட பல அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளன. 

உலகக் கோப்பை: காலிறுதிக்கு முந்தைய சுற்றின் அட்டவணை (இந்திய நேரம்)

டிசம்பர் 3: நெதர்லாந்து - அமெரிக்கா (இரவு 8.30 மணி), ஆர்ஜென்டீனா - ஆஸ்திரேலியா (நள்ளிரவு 12.30 மணி)

டிசம்பர் 4: பிரான்ஸ் - போலந்து (இரவு 8.30 மணி), இங்கிலாந்து - செனகல் (நள்ளிரவு 12.30 மணி)

டிசம்பர் 5: ஜப்பான் - குரோசியா (இரவு 8.30 மணி), பிரேஸில் - தென் கொரியா (நள்ளிரவு 12.30 மணி)

டிசம்பர் 6: ஸ்பெயின் - மொராக்கோ  (இரவு 8.30 மணி), போர்ச்சுகல் - ஸ்விட்சர்லாந்து  (நள்ளிரவு 12.30 மணி)

காலிறுதி ஆட்டங்கள் டிசம்பர் 9, 10 தேதிகளிலும் அரையிறுதிச்சுற்று டிசம்பர் 13, 14 தேதிகளிலும் இறுதிச்சுற்று டிசம்பர் 18 அன்றும் நடைபெறுகின்றன. 3-வது இடத்துக்கான ஆட்டம் டிசம்பர் 17 அன்று நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com