வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

வில்லியம்சன் ராஜிநாமா: நியூசி டெஸ்ட் அணிக்குப் புதிய கேப்டன்!

நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்வதாகப் பிரபல வீரர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.

News image
Updated On :15 டிசம்பர் 2022, 8:25 am

நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்வதாகப் பிரபல வீரர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.

32 வயது வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக 88 டெஸ்டுகள், 158 ஒருநாள், 87 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி வென்றது. 

இந்நிலையில் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் வில்லியம்சன். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடப் போவதாக அறிவித்துள்ள வில்லியம்சன், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நியூசி. அணியின் கேப்டனாகத் தொடர்வதாகவும் கூறியுள்ளார். 

செளதி

செளதி

பிரண்டன் மெக்கல்லமுக்கு அடுத்ததாக 2016-ல் நியூசிலாந்து கேப்டனான வில்லியம்சன், 40 டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கி, 22 வெற்றிகளைப் பெற்றுள்ளார். 10 டெஸ்டுகளில் தோல்வியடைந்து 8 டெஸ்டுகளை டிரா செய்துள்ளார். 

இதையடுத்து நியூசிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக டிம் செளதி நியமிக்கப்பட்டுள்ளார். 1 ஒருநாள், 22 டி20 ஆட்டங்களுக்கு கேப்டனாகப் பணியாற்றியுள்ளார் டிம் செளதி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.