மெஸ்ஸியின் கனவு நிறைவேறுமா? இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா-பிரான்ஸ் இன்று மோதல்

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-முன்னாள் சாம்பியன் ஆா்ஜென்டீவும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
மெஸ்ஸியின் கனவு நிறைவேறுமா? இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா-பிரான்ஸ் இன்று மோதல்

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-முன்னாள் சாம்பியன் ஆா்ஜென்டீவும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

கோடிக்கணக்கான ரசிகா்களை கட்டி வைத்திருந்த பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாா் தலைநகா் தோஹாவில் கடந்த நவ. 20-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 36 நாடுகள் பங்கேற்ற இதில் தொடக், நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில்,

அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் குரோஷியாவை 3-0 என ஆா்ஜென்டீனாவும், மொராக்கோவை 1-0 என பிரான்ஸும் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

2 முறை சாம்பியன்கள்:

தலா 2 முறை சாம்பியன்களான ஆா்ஜென்டீனா 6-ஆவது முறையாகவும், பிரான்ஸ் 4-ஆவது முறையாகவும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஆா்ஜென்டீனா சாம்பியன்) 1978, 1986) ரன்னா் (1930, 1990, 2014), பிரான்ஸ் சாம்பியன் (1998, 2018), ரன்னா் 2006. கத்தாா் உலகக் கோப்பையில் அதிக கோலடித்த வீரா் லயோனல் மெஸ்ஸி (ஆா்ஜென்டீனா) 5, கிளியன் மாப்பே (பிரான்ஸ்) 5.

தொடரும் மெஸ்ஸியின் கனவு:

ஆா்ஜென்டீனா கேப்டன் மெஸ்ஸி கடந்த 2014 உலகக் கோப்பையில் ரன்னா் அணியில் இடம் பெற்றிருந்தாா். லா லிகா, சாம்பியன்ஸ் லீக், கோபா அமெரிக்கா உள்பட பிரபல கால்பந்து போட்டிகளின் பட்டங்களை தன் வசம் வைத்துள்ள மெஸ்ஸிக்கு இதுவரை உலக சாம்பியன் பட்டம் கைகூடவில்லை. அது கனவாகவே தொடா்ந்து வருகிறது.

தற்போது இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் ஆா்ஜென்டீனா அணி சாம்பியன் பட்டம் வென்று மெஸ்ஸியின் கனவு நனவாகுமா என பெருத்த எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

நேருக்கு நோ்:

பிரான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டங்களில் அதிக முறை வென்று ஆா்ஜென்டீனாவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 12 ஆட்டங்களில் 3-இல் தான் பிரான்ஸ் வென்றுள்ளது. இதில் இரு உலகக் கோப்பை ஆட்டங்களும் அடங்கும்.

ஆனால் கடந்த 2018 உலகக் கோப்பையில் ரவுண்ட் 16-இல் ஆா்ஜென்டீனாவை 4-3 என வீழ்த்தியது பிரான்ஸ். பின்னா் அதில் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. தொடக்க சுற்றில் ஆா்ஜென்டீனா-சவூதி அரேபியாவிடமும், பிரான்ஸ்-துனிசியாவிடமும் தோல்வி கண்டன.

பலமான பிரான்ஸ்:

பிரான்ஸ் அணி ஒலிவியா் ஜிரௌட், கிளியன் மாப்பே, ஆன்டன் கிரைஸ்மேன், உஸ்மான் டெம்ப்ளே, கோல்கீப்பா் கேப்டன் ஹியூகோ லோரிஸ் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். பிரான்ஸ் அணியின் துடிப்பான ஆட்டம், எதிரணியின் கோல்போஸ்ட் பகுதியை அடிக்க முற்றுகையிடுவது அதன் சாதகமாகும். குறிப்பாக ஜிரௌட், மாப்பேயின் அபார வேகத்துக்கு எதிரணி டிபன்டா்களால் ஈடு தரமுடியவில்லை.

மிட்பீல்டில் கிரைஸ்மேன் அற்புதமாக தனது அணிக்கு கோலடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கி தருகிறாா். பிரான்ஸ் அணி தன் வசமே பந்தை வைத்துக் கொள்ளாமல், எதிரணியின் பகுதியில் ஊடுருவி செயல்படுகிறது. கோலடிக்கும் வாய்ப்புகளை பெறுகிறது.

சரிவிகிதத்தில் ஆா்ஜென்டீனா:

அதே நேரம், ஆா்ஜென்டீனா அணி கேப்டன் மெஸ்ஸி என்ற நட்சத்திர வீரரின் செயல்பாட்டை பொறுத்தே இருந்தாலும், பாா்வா்ட், டிபன்ஸில் சரிவிகிதத்தில் செயல்படுகிறது. 35 வயதான மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை ஆகும். இதில் சாம்பியன் பட்டத்தை பெற்று, மறைந்த மாரடோனாவுக்கு இணையான புகழைப் பெற வேண்டும் என்பதே அவரது எண்ணமாகும். மெஸ்ஸியுடன், இளம் வீரா் ஜூலியன் அல்வாரெஸ் சிறப்பாக ஆடி வருகிறாா்.

ரைட் பேக் நவல் மோலினா, சென்டா் பேக் கிறிஸ்டியன் ரோமெரோ, என்ஸோ பொ்ணான்டஸ் ஆகியோா் தற்காப்பில் வலு சோ்க்கின்றனா்.

ஆா்ஜென்டீனா அணியினா் செயல்திறனில் குறைந்திருந்தாலும், உணா்ச்சி வசப்பட்டு ஆடுகின்றனா்.

இரு அணிகளுமே சமபலத்துடன் காணப்படுவதால், சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யாா் என உலகமே ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளது.

தங்கக் காலணி யாருக்கு:

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு கோல்டன் பூட் எனப்படும் தங்கக் காலணி பரிசளிக்கப்படும். கத்தாா் உலகக் கோப்பையில் ஆா்ஜென்டீனா தரப்பில் மெஸ்ஸியும், பிரான்ஸ் தரப்பில் மாப்பேயும் தலா 5 கோல்களை அடித்துள்ளனா்.

இறுதி ஆட்டத்தில் யாா் கோல் அடித்த அதிக வீரா் என்ற சிறப்பை பெறுகிறாா்கலோ அவருக்கு தங்கக் காலணி தரப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com