இந்தியாவுடன் நடைபெற உள்ள 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து வங்கதேச வீரர் எபடோட் ஹூசைன் விலகியுள்ளார்.
காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹூசைன் 22ஆம் தேதி நடைபெறும் போட்டியில் விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி 22ஆம் தேதி தொடங்குகிறது.
The Bangladesh Cricket Board (BCB) announces the squad for the second Test (22-26 December 2022) against India at the Sher-e-Bangla National Cricket Stadium, Mirpur.#BCB | #Cricket | #BANvIND pic.twitter.com/yaN9sVRGq3
â Bangladesh Cricket (@BCBtigers) December 18, 2022
ஏற்கெனவே காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து ரோஹித் சா்மா விலகியிருக்கும் நிலையில், அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் இந்திய அணி கேப்டன் பொறுப்பேற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஜூனில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதிபெற இந்தத் தொடா் மிக முக்கியமானதாகும்.
இதன் இரு ஆட்டங்களில் வெல்வதோடு, அடுத்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் 4 ஆட்டங்களிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா. வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி 22ஆம் தேதி தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடிவேலு பட பாணியில் டிராமா! வலிப்பு வந்தது போல் நடித்துப் பணம் பறிப்பு!

திருச்சி அரசு மருத்துவமனையில் விரைவில் சூரியஒளி மின்சாரத் திட்டம்

ஷேக் ஹசீனாவும் இந்தியாவின் தா்மசங்கடமும்...
சிப்காட் விவகாரம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை வலியுறுத்தும் கிராமத்தினா்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



