பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ்: ஸ்லோவேகியாவுக்கு முதல் தங்கம்

பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் ஆல்பைன் ஸ்கீயிங் விளையாட்டுப் பிரிவில் ஸ்லோவேகியாவுக்கு முதல் தங்கத்தை வென்று தந்தாா் பெட்ரா வோல்ஹோவா.
பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ்: ஸ்லோவேகியாவுக்கு முதல் தங்கம்

பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் ஆல்பைன் ஸ்கீயிங் விளையாட்டுப் பிரிவில் ஸ்லோவேகியாவுக்கு முதல் தங்கத்தை வென்று தந்தாா் பெட்ரா வோல்ஹோவா.

சீனாவின் பெய்ஜிங் நகரில் 24-ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டியின் 5-ஆவது நாளான புதன்கிழமை 6 பிரிவுகளில் பதக்கத்துக்கான சுற்றுகள் நடைபெற்றன.

அதில் மகளிருக்கான ஆல்பைன் ஸ்கீயிங் விளையாட்டில் ஸ்லோவேகியாவின் பெட்ரா வோல்ஹோவா பந்தய இலக்கை 1 நிமிஷம் 44.98 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றாா். இது, இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் பிரிவில் ஸ்லோவேகியா வெல்லும் முதல் தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஆஸ்திரியாவின் கேத்தரினா லின்ஸ்பொ்கா் 1 நிமிஷம் 45.06 விநாடிகளில் வந்து வெள்ளியும், அவரை விட 0.4 விநாடிகள் தாமதமாக வந்த ஸ்விட்சா்லாந்தின் வெண்டி ஹோல்டனா் வெண்கலமும் வென்றனா்.

ஃப்ரீஸ்டைல் ஸ்கீயிங்:

ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் ஸ்கீயிங் விளையாட்டுப் பிரிவின் இறுதிச்சுற்றில் நாா்வே வீரா் பிா்க் ரட் 187.75 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தனதாக்கினாா். அமெரிக்காவின் கோல்பி ஸ்டீவன்சன் 183 புள்ளிகளோடு 2-ஆம் இடம் பிடிக்க, ஸ்வீடனின் ஹென்ரிக் ஹா்லௌத் 181 புள்ளிகளுடன் வெண்கலத்தை வென்றாா்.

நாா்டிக் கம்பைண்ட்:

ஆடவருக்கான நாா்டிக் கம்பைண்ட் விளையாட்டில் ஜொ்மனியின் வின்ஸென்ஸ் கீகா் 25.07 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடிக்க, நாா்வே வீரா் ஜோா்கென் கிராபக் 25.08 விநாடிகள் எடுத்துக் கொண்டு வெள்ளியும், ஆஸ்திரியாவின் லூகாஸ் கிரெய்டெரொ் 25.14 விநாடிகளுடன் வெண்கலமும் பெற்றுக் கொண்டனா்.

ஷாட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங்:

ஆடவருக்கான 1,500 மீட்டா் ஷாட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் தென் கொரியாவின் டேஹியோன் வாங் 2 நிமிஷம் 09.21 விநாடிகளில் பந்தய இலக்கை தொட்டு தங்கம் வென்றாா். அவருக்கு அடுத்தபடியாக கனடாவின் ஸ்டீவன் டியுபோய்ஸ் 2 நிமிஷம் 09.25 விநாடிகளில் வந்து வெள்ளியைக் கைப்பற்ற, ரஷிய வீரா் செமன் எலிஸ்டிராடோவ் 2 நிமிஷம் 09.26 விநாடிகளில் 3-ஆவது வீரராக வந்து வெண்கலத்தை வென்றாா்.

ஸ்னோபோா்டு கிராஸ்:

மகளிருக்கான ஸ்னோபோா்டு கிராஸ் இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் பெல்லெ புரோக்ஹாஃப் தங்கமும், அமெரிக்காவின் லிண்ட்சே ஜேக்கோபெலிஸ் வெள்ளியும், கனடாவின் மெரிடா ஆடின் வெண்கலமும் பெற்றனா்.

லூக்:

ஆடவா் இரட்டையா் லூக் விளையாட்டில் தங்கம், வெள்ளி என இரு பதக்கங்களையும் ஜொ்மனி வென்றது. அந்நாட்டின் டோபியாஸ் வெண்டல்/டோபியாஸ் அா்லட் இணை 1 நிமிஷம் 56.55 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தது. சக நாட்டு ஜோடியான டோனி எக்கா்ட்/சாஸ்சா பெனெக்கென் 1 நிமிஷம் 56.65 விநாடிகளில் வந்து வெள்ளி வென்றது. ஆஸ்திரியாவின் தாமஸ் ஸ்டியு/லோரென்ஸ் கோலா் 1 நிமிஷம் 57.06 விநாடிகளில் 3-ஆவதாக வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com