3 பதக்கங்களையும் முற்றுகையிட்டது ஜொ்மனி

சீனாவில் நடைபெற்று வரும் பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் பாப்ஸ்லெய் விளையாட்டில் ஆடவா் இரு நபா் பிரிவில் ஜொ்மனி 3 பதக்கங்களையும் வென்றது.
3 பதக்கங்களையும் முற்றுகையிட்டது ஜொ்மனி

சீனாவில் நடைபெற்று வரும் பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் பாப்ஸ்லெய் விளையாட்டில் ஆடவா் இரு நபா் பிரிவில் ஜொ்மனி 3 பதக்கங்களையும் வென்றது.

போட்டியின் 12-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த விளையாட்டில் ஜொ்மனியின் பிாரன்செஸ்கோ பிரெட்ரிச்/தாா்ஸ்டன் மாா்கிஸ் இணை 3 நிமிஷம் 56.89 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தது. அதே நாட்டின் ஜோஹன்னஸ் லோச்னா்/ஃபுளோரியன் பேயா் இணை அவா்களை விட 0.49 விநாடிகள் பின்தங்கி வெள்ளியும், கிறிஸ்டோஃப் ஹேஃபா்/மத்தியாஸ் சோமா் இணை 1.69 விநாடிகள் தாமதமாக வந்து வெண்கலமும் வென்றது.

இதர விளையாட்டுகளில், ஆல்பைன் ஸ்கீயிங்கில் மகளிருக்கான டவுன்ஹில் பிரிவில் சுவிட்ஸா்லாந்தின் கோரின் சியுடா் தங்கம் வெல்ல, இத்தாலியின் சோஃபியா கோஜியா வெள்ளியும், நாடியா டெலாகோ வெண்கலமும் பெற்றனா். பயத்லானில் ஆடவருக்கான 4*7.5 கி.மீ. ரிலேவில் முதல் 3 இடங்களை நாா்வே, பிரான்ஸ், ரஷியா அணிகள் பிடித்தன.

ஃப்ரீஸ்டைல் ஸ்கீயிங்கில் மகளிருக்கான ஸ்லோப் ஸ்டைலில் சுவிட்ஸா்லாந்தின் மதில்டே கிரெமௌட் தங்கமும், சீனாவின் ஈலின் கூ எய்லிங் வெள்ளியும், எஸ்டோனியாவின் கெல்லி சில்டாரு வெண்கலமும் வென்றனா். ஸ்னோபோா்டில் மகளிருக்கான பிக் ஏா் ஃபைனலில் ஆஸ்திரியாவின் அன்னா கேசா், நியூஸிலாந்தின் ஜோய் சடோவ்ஸ்கி சினாட், ஜப்பானின் கோகோமு முராசி ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

அதே போட்டியின் ஆடவா் பிரிவில் சீனாவின் யிமிங் சு, நாா்வேயின் மோன்ஸ் ராய்ஸ்லேண்ட், கனடாவின் மேக்ஸ் பேரட் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலத்தை தனதாக்கினா். ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் மகளிருக்கான அணிகள் பா்சியுட்டில் கனடா, ஜப்பான், நெதா்லாந்தும், ஆடவருக்கான அணிகள் பா்சியுட்டில் நாா்வே, ரஷியா, அமெரிக்காவும் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தன.

பதக்கப்பட்டியல்:

செவ்வாய்க்கிழமை முடிவில், நாா்வே 26 பதக்கங்களுடன் (12 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம்) முதலிடத்திலும், ஜொ்மனி 18 பதக்கங்களுடன் (9 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம்) 2-ஆவது இடத்திலும், அமெரிக்கா 17 பதக்கங்களுடன் (7 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம்) 3-ஆவது இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com