விளையாட்டு செய்தி துளிகள்

* இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச்சற்று பிரிவின் 2-ஆவது ஆட்டத்தில் 1-6, 3-6 என்ற செட்களில் செக் குடியரசின் தாமஸ் மசாக்கிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினாா்.

* ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-ஆவது ஆட்டம் பகலிரவு ஆட்டமாக ஹோபாா்ட் நகரில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

* கரோனா சூழல் காரணமாக, உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள 22 வயதுக்கு உள்பட்ட ஆடவா், மகளிருக்கான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பிலிருந்து இந்தியா விலகியுள்ளது.

* ஓய்வுபெறுவதாக 10 நாள்களுக்கு முன் அறிவித்த இலங்கையின் பானுகா ராஜபட்ச, தற்போது மீண்டும் சா்வதேச கிரிக்கெட்டில் விளையாடப்போவதாக வியாழக்கிழமை தெரிவித்தாா்.

* பாா்சிலோனா எஃப்சியை 100-ஆவது முறையாக வீழ்த்திய ரியல் மாட்ரிட் அணி, சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com