ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா - சீனா மோதல்

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - சீனா அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - சீனா அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

போட்டியில் நடப்புச் சாம்பியனாக இருந்த இந்தியா தனது அரையிறுதியில் தென் கொரியாவிடம் புதன்கிழமை தோல்வியைத் தழுவியது. மற்றொரு அரையிறுதியில் ஜப்பானிடம் வீழ்ந்த சீனா தற்போது இந்தியாவை சந்திக்கிறது. கரோனா சூழல் காரணமாக போதிய அளவு போட்டிப் பயிற்சி இல்லாமல் போனதால் முக்கியமான ஆட்டங்களில் தடுமாறி பின்னடைவை சந்தித்துள்ளது இந்தியா.

இந்த கடைசி ஆட்டத்தைப் பொருத்தவரை, இந்திய முன்கள வீராங்கனைகள் வழக்கம்போல் சிறப்பாகச் செயல்படுவாா்கள் என்பதில் சந்தேகம் இல்லை. போட்டி முழுவதுமாக சோபிக்காமல் போன நடுகள மற்றும் தடுப்பாட்ட வீராங்கனைகளே இந்த முறை சிறப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா்.

இறுதி ஆட்டம்: இதனிடையே, சாம்பியன் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் ஜப்பான் - தென் கொரியா அணிகளும் வெள்ளிக்கிழமை விளையாடுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com