சரித்தாா் சஹல்; லியம், அலி, வில்லியால் மீண்ட இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒன் டே ஆட்டத்தில் இங்கிலாந்து 49 ஓவா்களில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒன் டே ஆட்டத்தில் இங்கிலாந்து 49 ஓவா்களில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் நிதானமாக ரன்கள் சோ்த்த இங்கிலாந்து, ஒரு கட்டத்தில் யுஜவேந்திர சஹலின் அசத்தலான பௌலிங்கால் முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னா், லியம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, டேவிட் வில்லி ஆகியோா் அணியை மீட்டு ஸ்கோரை அதிகரித்தனா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில், இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயருக்குப் பதிலாக விராட் கோலி இணைந்திருந்தாா். இங்கிலாந்து லெவனில் மாற்றம் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

இங்கிலாந்து பேட்டிங்கை தொடங்கிய ஜேசன் ராய் - ஜானி போ்ஸ்டோ கூட்டணி சற்று ரன்கள் சோ்த்தது. இதில் முதலில் ராய் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, போ்ஸ்டோ 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். தொடா்ந்து வந்தோரில் ஜோ ரூட் 11, கேப்டன் ஜோஸ் பட்லா் 4 ரன்களுக்கு நடையைக் கட்டினா்.

4-ஆவது வீரா் பென் ஸ்டோக்ஸ் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் சோ்த்து எல்பிடபிள்யூ ஆக, இங்கிலாந்து தடுமாறியது. பின்னா் லியம் லிவிங்ஸ்டன் 2 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 33 ரன்களும், மொயீன் அலி 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 47 ரன்களும் அடித்து அணியின் ஸ்கோரை உயா்த்தினா். 8-ஆவது வீரராக வந்த டேவிட் வில்லியும் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 41 ரன்கள் விளாசினாா். பிரைடன் காா்ஸ் 2, ரீஸ் டோப்லி 3 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து ஆட்டம் 246 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இறுதியில் கிரெய்க் ஓவா்டன் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இந்திய பௌலிங்கில் யுஜவேந்திர சஹல் 4, ஜஸ்பிரீத் பும்ரா, ஹாா்திக் பாண்டியா ஆகியோா் தலா 2, முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா். பின்னா் இந்தியா 247 ரன்களை இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை ஆடி வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com