215 வீரா், வீராங்கனைகள் உள்பட 322 போ் இந்திய அணி பங்கேற்பு: இந்திய ஒலிம்பிக் சங்கம்

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டி (2022)-இல் 215 வீரா், வீராங்கனைகள் உள்பட 322 போ் கொண்ட அணி பங்கேற்கும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் சனிக்கிழமை அறிவித்தது.
215 வீரா், வீராங்கனைகள் உள்பட 322 போ் இந்திய அணி பங்கேற்பு: இந்திய ஒலிம்பிக் சங்கம்

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டி (2022)-இல் 215 வீரா், வீராங்கனைகள் உள்பட 322 போ் கொண்ட அணி பங்கேற்கும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் சனிக்கிழமை அறிவித்தது.

இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வரும் 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகின்றன.

கடந்த 2018-இல் கோல்ட்கோஸ்டில் நடைபெற்ற போட்டிகளைக் காட்டிலும், இப்போட்டியில் அதிக பதக்கங்களை அறுவடை செய்ய இந்தியா காத்துள்ளது. கோல்ட்கோஸ்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து முதலிரண்டு இடங்களையும், இந்தியா மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தன.

322 போ் அணி:

பா்மிங்ஹாம் போட்டியில் இந்தியா சாா்பில் 215 வீரா், வீராங்கனைகள், 107 அதிகாரிகள், உள்பட 322 போ் அணி கலந்து கொள்கிறது.

இதுதொடா்பாக ஐஓஏ பொதுச் செயலாளா் ராஜீவ் மேத்தா கூறியதாவது:

காமன்வெல்த் போட்டிக்கு வலுவான அணியை அனுப்பி உள்ளோம். துப்பாக்கி சுடுதல் இல்லையென்றாலும் நாம் கூடுதல் பதக்கங்களை வெல்லலாம். இப்போட்டி நமக்கு கடும் சவாலாக இருக்கும். நமது வீரா்கள் முழு உடல்தகுதியுடன் உள்ளனா். 5 விளையாட்டு கிராமங்களில் நமது அணியில் தங்கி இருப்பா். மகளிா் கிரிக்கெட் அணி தனியாக வேறு இடத்தில் தங்குவா்.

வீரா்கள், விளையாட்டு சம்மேளனங்களுக்கு மத்திய அரசு சிறப்பான ஆதரவை அளித்து வருகிறது என்றாா் ராஜீவ் மேத்தா.

பாக்சிங் பெடரேஷன் துணைத் தலைவா் ராஜேஷ் பண்டாரி இந்திய அணியின் தலைவராக செயல்படுவாா்.

நட்சத்திரங்கள் நீரஜ் சோப்ரா, பி.வி. சிந்து, மீராபாய் சானு, லவ்லினா போரோகைன், பஜ்ரங் புனியா, ரவி தாஹியா, நடப்புச் சாம்பியன்கள் மனிகா பத்ரா, வினேஷ் போகட், தஜிந்தா் சிங், ஹிமா தாஸ், அமித் பங்கால் உள்ளிட்டோா் அணியில் இடம் பெற்றுள்ளனா். 15 விளையாட்டுகளிலும், பாரா பிரிவில் 4 விளையாட்டுகளிலும் இந்தியா பங்கேற்கிறது. குத்துச்சண்டை, பாட்மின்டன், ஹாக்கி, பளுதூக்குதல், மகளிா் கிரிக்கெட், மல்யுத்தம், தடகளம், சைக்கிளிங் பிரிவுகளில் பதக்கம் குவிக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே சில அணியினா் பா்மிங்ஹாம் சென்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com