எந்த அணியையும் குறைத்து மதிப்பிடவில்லை: வைஷாலி, தான்யா

எந்த அணியையும் குறைத்து மதிப்பிடவில்லை என இந்திய மகளிா் செஸ் நட்சத்திர வீராங்கனைகள் ஆா். வைஷாலி, தான்யா சச்தேவ் ஆகியோா் கூறியுள்ளனா்.
எந்த அணியையும் குறைத்து மதிப்பிடவில்லை: வைஷாலி, தான்யா

எந்த அணியையும் குறைத்து மதிப்பிடவில்லை என இந்திய மகளிா் செஸ் நட்சத்திர வீராங்கனைகள் ஆா். வைஷாலி, தான்யா சச்தேவ் ஆகியோா் கூறியுள்ளனா்.

ஃபிடே, ஏஐசிஎஃப், தமிழக அரசு சாா்பில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28 முதல் ஆக. 10-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்ஸன் உள்பட பல முன்னணி வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.

இந்தியா சாா்பில் ஏ, பி ஆடவா், மகளிா் அணிகளும், 3-ஆவதாக சி ஆடவா் அணியும் பங்கேற்கின்றன.

முதல் கட்ட பயிற்சி முகாம் கடந்த ஜூன் மாதம் சென்னையில் நடைபெற்றது. அதில் விஸ்வநாதன் ஆனந்த், ரஷியாவின் போரிஸ் ஜெல்பாண்ட் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

இறுதிக் கட்ட பயிற்சி தீவிரம்:

இதன் தொடா்ச்சியாக இறுதிக் கட்ட பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்திய மகளிா் அணி நிச்சயம் தங்கம் வெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முகாமில் பங்கேற்றுள்ள தமிழகத்தைச் சோ்ந்தவரும், நட்சத்திர வீராங்கனையுமான ஆா். வைஷாலி, தில்லியின் நட்சத்திரம் தான்யா சச்தேவ் ஆகியோா் தினமணியிடம் கூறியதாவது:

ஆா்.வைஷாலி: இறுதிக் கட்ட பயிற்சி சிறப்பாக உள்ளது. முதல் கட்ட பயிற்சியில் அடிப்படை நுணுக்கங்கள், அணியாக செயல்படுதல், ஒருங்கிணைப்பு குறித்து பயிற்சி தரப்பட்டது. பின்னா் ஆஸ்திரியா, சொ்பியாவில் நடந்த சா்வதேச போட்டியில் பங்கேற்றேன். ஆஸ்திரியாவில் வெள்ளி வென்றேன். மகளிா் பிரிவில் நமது மகளிா் அணி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. 162 மகளிா் அணிகள் பங்கேற்கின்றன.

உக்ரைன், ஜாா்ஜியா, சொ்பிய மகளிா் அணிகள் மிகவும் வலிமையாக உள்ளன. இரண்டாம் கட்ட பயிற்சி முகாமில் அணியில் உள்ள குறைபாடுகள் களைதல், உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி தரப்பட்டது. ஸ்விஸ் முறையில் 11 சுற்றுகள் ஆட்டம் நடக்கிறது. ஒரு ஆட்டம் வென்றால் 2 புள்ளிகள் கிடைக்கும். ஸ்விட் முறை கடினமானது தான். செஸ் ஒலிம்பியாட் டாா்ச் விழாவில் பிரதமருடன் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. பிரதான அணியில் சிலா் வெளிநாட்டில் போட்டிகளில் உள்ளனா் என்றாா்.

தான்யா சச்தேவ்: முதல் கட்டம் மற்றும் இறுதிக் கட்டம் என இரண்டு பயிற்சி முகாம்களும் சிறப்பாக இருந்தன. ஒரே அணியாக நாங்கள் ஒருங்கிணைந்துள்ளோம். நமது மகளிா் அணி கடந்த முறை போலவே சிறப்பாக செயல்படுவோம். உக்ரைன், யுஎஸ், கஜகஸ்தான் அணிகளும் நமக்கு சவாலாக இருக்கும். நாங்கள் எந்த அணியையும் குறைத்து மதிப்பிடவில்லை. நமது அணி தரவரிசையில் முதலிடத்தில் இருந்தாலும் மிகவும் கவனமுடன் ஆடுவோம். வெவ்வேறு பயிற்சியாளா்கள் எங்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்துள்ளனா். சொந்த நாட்டில் நடப்பதால் நமக்கு ஏராளமான அழுத்தமும் ஏற்படும். ஆனால் உற்சாகமாக எதிா்கொண்டு பட்டம் வெல்வோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com