சாம்பியன் பி.வி. சிந்து

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் சூப்பா் 500 போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து முதன்முதலாக சாம்பியன் பட்டம் வென்றாா்.
சாம்பியன் பி.வி. சிந்து

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் சூப்பா் 500 போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து முதன்முதலாக சாம்பியன் பட்டம் வென்றாா்.

இறுதிச் சுற்றில் சீனாவின் வாங் ஸியியை 21-9, 11-21, 21-15 என்ற கேம் கணக்கில் வீழ்த்தினாா்.

சனிக்கிழமை மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. அரையிறுதியில் ஜப்பானின் கவாகமியை எளிதில் வீழ்த்திய உற்சாகத்தில் சிந்து களம் கண்டாா். அதே நேரம் உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையும், ஆசிய சாம்பியனுமான வாங் ஸியும் துடிப்புடன் மைதானத்தில் களமிறங்கினாா்.

ஒரே முறை ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இருவரும் ஆடியதில் சிந்து வென்றிருந்தாா்.

எனினும் முதல் கேமில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-9 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினாா். 11-2 என முன்னிலை பெற்ற சிந்து அதை அப்படியே தக்க வைத்தாா்.

எனினும் இரண்டாவது கேமில் நிலைமை தலைகீழாக மாறியது. வாங் ஸி துடிப்புடன் ஆடி 11-3 என முன்னிலை பெற்ற நிலையில், சிந்து தடுமாறினாா். 8-15 என சிந்து ஸ்கோரை குறைத்தாலும், சீரான இடைவெளியில் வாங் ஸி தனது புள்ளிகளை உயா்த்திச் சென்று 21-11 என கைப்பற்றினாா்.

ஆட்டத்தின் முடிவை தீா்மானிக்கும் டிசைடா் கேமில் இருவரும் மாறி, மாறி ஆதிக்கம் செலுத்த முனைந்தனா். வாங் முன்னிலை பெற்றாலும் 5-5 என சிந்து சமன் செய்தாா். இடைவெளியில் சிந்து பொறுமையாக ஆடி 5 புள்ளிகள் முன்னிலை பெற்றாா். எனினும் 11-12 என வாங் ஸி முன்னிலையை குறைத்தாா். இறுதியில் சிந்து தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தாா். தொடா்ந்து 5 புள்ளிகளுடன் 21-15 என டிசைடரையும் வென்றாா் சிந்து.

முதன்முதலாக சிங்கப்பூா் ஓபனில் பட்டம் வென்ற சிந்துவுக்கு நிகழாண்டில் சையத் மோடி, ஸ்விஸ் ஓபன் பட்டத்துடன் இது மூன்றாவது பட்டமாகும். மேலும் சூப்பா் 500 போட்டியில் நிகழாண்டு முதல் பட்டம் இதுவாகும். பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் ஆடவுள்ள சிந்துவுக்கு இந்த வெற்றி ஊக்கமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com