ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்

ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
படம்: ட்விட்டர் | ஹாக்கி இந்தியா
படம்: ட்விட்டர் | ஹாக்கி இந்தியா


ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தியா, தென் கொரியா இடையிலான ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. ஆட்டம் சமனில் முடிந்ததால், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

இதையடுத்து, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஜப்பானை எதிர்கொண்டது இந்தியா. இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே இந்தியா சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜப்பானின் சிறப்பான தடுப்பாட்டத்தைத் தாண்டி 7-வது நிமிடத்தில் இந்தியா முதல் கோல் அடித்தது. இந்திய வீரர் ராஜ்குமார் இந்த கோலை அடித்தார்.

எனினும், தொடர்ந்து கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்ற இந்தியா தவறவிட்டது. இதன்பிறகு, முதல் பகுதி ஆட்டத்தின் முதல் 5 நிமிடங்களில் கோல் கணக்கை சமன் செய்ய ஜப்பான் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய வீரர்கள் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஜப்பானின் கோல் அடிக்கும் முயற்சியைத் தடுத்தனர்.  

இரண்டாம் பகுதி ஆட்டத்தில் இருஅணிகளுக்குமே கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், இருஅணிகளுமே அதைத் தவறவிட்டன.

பிறகு 48-வது நிமிடத்தில் ஜப்பானுக்கு தொடர்ச்சியாக மூன்று பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், இந்தியா சிறப்பாக செயல்பட்டு அதைத் தடுத்தது. 51-வது நிமிடத்திலும் இதுவே நடந்தது.

கடைசி நிமிடம் வரை இதுவே நீடிக்க, ஜப்பானால் இறுதி வரை ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. இதன்மூலம், 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

இறுதிப் போட்டியில் மலேசியா மற்றும் தென் கொரியா அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com