டெஸ்டில் சச்சின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் : முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் நம்பிக்கை

டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனயை ஜோ ரூட் முறியடிப்பாரென ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மார்க் டெய்லர் கருத்து தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனயை ஜோ ரூட் முறியடிப்பாரென ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மார்க் டெய்லர் கருத்து தெரிவித்துள்ளார். 

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் அபாரமாக விளையாடி  சதமடித்தார். அத்துடன் அவரது 10,000 ரன்களையும் கடந்தார். இளம் வயதிலேயே அந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

சர்வதேச அளவில் இதுவரை 13 பேர் 10,000 ரன்களை கடந்துள்ளனர். ஜோ ரூட் இந்த வரிசையில் 14ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்தில் இந்த இலக்கை அடையும் இரண்டாவது வீரர் இவரே. அலைஸ்டர் குக் முதலிடத்தில் இருக்கிறார். 

ஜோ ரூட் 118 போட்டிகளில் 10015 ரன்களை குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 200 போட்டிகளில் 15921 ரன்கள் எடுத்ததுதான் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

“ஜோ ரூட் இன்னும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும். அதனால் சச்சின் சாதனையை இவரால் எளிதாக முறியடிக்க முடியுமெனத் தோன்றுகிறது. 2, 3 வருடங்களாகவே இவரது பேட்டிங்கை கவனித்து வருகிறேன். அவருடைய கிரிக்கெட் வாழ்வில் உச்சநிலையில் இருக்கிறார். அவர் உடல்நலத்துடன் இருந்தால் 15000 ரன்களை எளிதாக அடைய முடியும்” என டெய்லர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com