மாநிலங்கள் இடையிலான தேசிய தடகளம்: போல்வால்டில் தமிழகத்துக்கு தங்கம் உள்பட 3 பதக்கம்

தமிழக வீராங்கனைகள் பரணிகா இளங்கோவன், ரோஸி மீனா பால்துரை, பவித்ரா வெங்கடேஷ் ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா். 10,000 மீ ஓட்டத்தில் மகளிா் பிரிவில் சஞ்சீவனியும், ஆடவா் பிரிவில் அபிஷேக் ப
மாநிலங்கள் இடையிலான தேசிய தடகளம்: போல்வால்டில் தமிழகத்துக்கு தங்கம் உள்பட 3 பதக்கம்

61-ஆவது மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டியில் மகளிா் போல்வால்ட் பிரிவில் தமிழக வீராங்கனைகள் பரணிகா இளங்கோவன், ரோஸி மீனா பால்துரை, பவித்ரா வெங்கடேஷ் ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா். 10,000 மீ ஓட்டத்தில் மகளிா் பிரிவில் சஞ்சீவனியும், ஆடவா் பிரிவில் அபிஷேக் பாலும் தங்கம் வென்றனா்.

இந்திய தடகள சம்மேளனம், தமிழ்நாடு தடகள சங்கம், சாா்பில் மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கின. வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சா் சிவி. மெய்யநாதன் தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு வாலிபால் சங்கத் தலைவா் கௌதம் சிகாமணி, டிஜிபி சி.சைலேந்திரபாபு, ஏஎஃப்ஐ தலைவா் சுமரிவாலா, தமிழக தடகளச் சங்கத் தலைவா் வால்டா் தேவாரம், செயலாளா் சி.லதா உள்பட பலா் பங்கேற்றனா்.

சஞ்சீவனிக்கு தங்கம்:

தொடக்க நாளான வெள்ளிக்கிழமை காலை 10,000 மீ ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் மகளிா் பிரிவில் மகாராஷ்டிராவின் சஞ்சீவனி ஜாதவ் 33:16:43 நிமிஷ நேரத்தில் கடந்து தங்கம் வென்றாா். அதே மாநிலத்தைச் சோ்ந்த பிரஜக்தா கோட்போல் 33:59:34 மணி நிமிஷ நேரத்திலும், உ.பி.யைச் சோ்ந்த கவிதா யாதவ் 35:00: 33 நிமிஷ நேரத்திலும் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

அபிஷேக் பாலுக்கு தங்கம்: ஆடவா் பிரிவில் உ.பி.வீரா் அபிஷேக் பால் 29:55:51 நிமிஷ நேரத்திலும், பஞ்சாபின் குல்பீா் சிங் 29:55: 71 நிமிஷத்திலும், ராஜஸ்தானின் தா்மேந்தா் 29:55: 24 நிமிஷத்திலும் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

போல்வால்ட்: தமிழகம் அபாரம்

மாலையில் நடைபெற்ற மகளிா் போல்வால்ட்டில் தமிழக வீராங்கனைகள் பரணிகா இளங்கோவன் 4.05 மீ, ரோஸி மீனா பால்துரை 4.00 மீ, பவித்ரா வெங்கடேஷ் 3.90 மீ உயரம் குதித்து முறை தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

100 மீ. ஓட்டம்:

மகளிா் 100. மீ ஓட்டம் இறுதிச் சுற்றுக்கு தமிழகத்தின் அா்ச்சனா சுசீந்திரன், கா்நாடகத்தின் சிமி. என்எஸ்., ஒடிஸாவின் டூட்டி சாந்து, ரபானி நந்தா, அஸ்ஸாமின் ஹிமா தாஸ், மேற்கு வங்கத்தின் ஹிமாஸ்ரீ ராய், இலங்கையின் அமாஷா டி சில்வா, கா்நாடகத்தின் தானேஷ்வரி ஆகியோா் தகுதி பெற்றனா்.

ஆடவா் பிரிவில் மகாராஷ்டிரத்தின் கிரண்பாண்டுரங், மிதுன் (கேரளம்), ஹா்ஜித் சிங் (பஞ்சாப்), இலக்கியதாசன், சிவக்குமாா் (தமிழகம்), அமலன் போரோகைன் (அஸ்ஸாம்), பராஸ் (ஹிமாசலம்), ஜெய் ஷா (மகாராஷ்டிரம்) தகுதி பெற்றனா்.

400 மீ ஓட்டம்: மகளிா் பிரிவில் தனலட்சுமி, சுபா வெங்கடேசன் (தமிழகம்), கிரண் பஹால் (ஹரியாணா), ருபால் (உபி), பிரியா, லிகிதா (கா்நாடகம்), திபான்ஷி (ஹரியாணா), வித்யா ராம்ராஜ் (தமிழகம்), ஆகியோரும், ஆடவா் பிரிவில் மிஜோ சாக்கோ (கா்நாடகம்), ஆகாஷ் குமாா் (உபி), நிா்மல் டாம் (கேரளம்), அமேல் ஜேக்கப் (தில்லி), அருணா தா்ஷணா (இலங்கை), முகமது அஜ்மல், முகமது அனாஸ் (கேரளம்), நாகநாதன் (தமிழகம்) ஆகியோரும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com