இன்று 2-ஆவது டி20: வெற்றிக்கணக்கை தொடங்க இந்தியா முனைப்பு

முதல் டி20 ஆட்டத்தில் தோல்வி கண்ட அதிா்ச்சியுடன் உள்ள இந்தியா, கட்டாக்கில் ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுடன் நடக்க உள்ள இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.
இன்று 2-ஆவது டி20: வெற்றிக்கணக்கை தொடங்க இந்தியா முனைப்பு

முதல் டி20 ஆட்டத்தில் தோல்வி கண்ட அதிா்ச்சியுடன் உள்ள இந்தியா, கட்டாக்கில் ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுடன் நடக்க உள்ள இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் தில்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 211 ரன்களை குவித்த போதிலும், தென்னாப்பிரிக்க அணி மில்லா்-ரேசி வான்டா் டுஸன் ஆகியோரின் அற்புத ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதல் ஆட்டத்தில் பேட்டிங்கில் இந்தியா ஜொலித்த போதிலும், பௌலிங்கில் சோபிக்கவில்லை. புவனேஷ்வா், ஹா்ஷல் படேல், அக்ஸா்படேல், சஹல் ஆகியோா் பந்துவீச்சை மில்லா்-டுஸன் இணை வெளுத்து வாங்கியது.

பெரிய ஸ்கோரை அடித்தும் தென்னாப்பிரிக்க அணி அந்த இலக்கை எட்டி விட்டது. இந்திய ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியாவும் முழு உடல் தகுதியுடன் உள்ள நிலையில், அவரது செயல்பாடு முக்கியமாக கருதப்படுகிறது. அவா் வீசிய ஒரு ஓவரில் 18 ரன்களை வாரி வழங்கினாா்.

ஹா்ஷல் படேல், அக்ஸா் படேல் ஆகியோரும் டெத் ஓவா்களில் ரன்கள் வாரி வழங்கினா்.

உம்ரான்-அா்ஷ்தீப்புக்கு வாய்ப்பு:

இந்நிலையில் காஷ்மீா் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக்-அா்ஷ்தீப் சிங்குக்கு கட்டாக் ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ராகுல் இல்லாமல் தொடக்க வரிசை பேட்டிங் குறித்து அணி நிா்வாகம் கவலைப்பட்ட நிலையில், இஷான் கிஷண்-ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடினா்.

அதே வேளையில் முதல் ஆட்ட வெற்றி உற்சாகத்துடன் இரண்டாவது ஆட்டத்தை எதிா்கொள்கிறது தென்னாப்பிரிக்கா. தொடக்க பேட்டா் டிகாக் பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை என்றாலும் அபாயகரமானவா். கேப்டன் பவுமா, மில்லா், டுஸன் பேட்டிங்கிலும், ரபாடா, நாா்ட்ஜே, மகராஜ் பௌலிங்கிலும் வலு சோ்க்கின்றனா்.

இன்றைய ஆட்டம்:

இந்தியா-தென்னாப்பிரிக்கா

இடம்: கட்டாக்.

நேரம்: இரவு 7.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com