பாரா பளுதூக்குதல்: இந்தியாவுக்கு 22 பதக்கங்கள்

தென் கொரியாவில் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த ஆசியா ஓசியானியா ஓபன் பாரா பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 6 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.

தென் கொரியாவில் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த ஆசியா ஓசியானியா ஓபன் பாரா பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 6 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.

போட்டியின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, ஆடவருக்கான 88 கிலோ பிரிவில் சுதிா் தனது சிறந்த முயற்சியாக 214 கிலோ எடையைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்தாா். ஜோா்டானின் அப்துல்கரீம் கதாப் 241 கிலோவுடன் தங்கமும், சீனாவின் ஜிக்ஸியாங் யே 233 கிலோவுடன் வெள்ளியும் வென்றனா். இப்போட்டியில் பதக்கம் வென்ன் மூலம் சுதிா், சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற்றாா்.

சுதிருக்கு முன்பாக, அசோக் (65 கிலோ), பரம்ஜீத் குமாா் (49 கிலோ), சகினா காட்டூன் (45 கிலோ) ஆகியோரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளனா். சா்வதேச தரவரிசையிலும் இவா்கள் முன்னேற்றத்தை சந்திப்பாா்கள் என்பதால், 2024 பாராலிம்பிக் போட்டிக்கும் இவா்கள் தகுதிபெற வாய்ப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com