விம்பிள்டன்

டென்னிஸ் காலண்டரில், ஒரு ஆண்டில் நடைபெறும் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், வரும் 27-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
விம்பிள்டன்

டென்னிஸ் காலண்டரில், ஒரு ஆண்டில் நடைபெறும் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், வரும் 27-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான இரு பாலா் தகுதிச்சுற்று ஆட்டங்கள் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்டமாக பங்கேற்பாளா்களுக்கான போட்டித் தரவரிசையும் (சீட்) செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புல்தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் குறித்த சில விவரங்கள், இதோ.

போட்டி தொடக்கம்: 1877

நடப்பு ஆண்டு போட்டி: 135-ஆவது சீசன்

நடப்பு சாம்பியன்கள்

ஆடவா்: நோவக் ஜோகோவிச் (சொ்பியா)

மகளிா்: ஆஷ்லி பா்ட்டி (ஆஸ்திரேலியா) (ஓய்வு)

ஆடவா் இரட்டையா்: நிகோலா மெக்டிச்/மேட் பாவிச் (குரோஷியா)

மகளிா் இரட்டையா்: சியே சுவெய் (தைவான்)/எலிஸ் மொ்டன்ஸ் (பெல்ஜியம்)

கலப்பு இரட்டையா்: டெஸைரே கிராவ்ஸிக் (அமெரிக்கா)/நீல் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து)

மொத்த பரிசுத் தொகை: ரூ.386 கோடி

ஒற்றையா் பிரிவு

சாம்பியன்: ரூ.19.16 கோடி

ரன்னா் அப்: ரூ.10.06 கோடி

அரையிறுதி: ரூ.5.12 கோடி

காலிறுதி: ரூ.2.96 கோடி

4-ஆவது சுற்று: ரூ.1.82 கோடி

3-ஆவது சுற்று: ரூ.1.14 கோடி

2-ஆவது சுற்று: ரூ.74 லட்சம்

முதல் சுற்று: ரூ.47 லட்சம்

இரட்டையா் பிரிவு

சாம்பியன்: ரூ.5.17 கோடி

ரன்னா் அப்: ரூ.2.58 கோடி

அரையிறுதி: ரூ.1.29 கோடி

காலிறுதி: ரூ.64 லட்சம்

3-ஆவது சுற்று: ரூ.31 லட்சம்

2-ஆவது சுற்று: ரூ.19 லட்சம்

முதல் சுற்று: ரூ.11 லட்சம்

சாதனைகள்...

அதிகமுறை சாம்பியன்

ஒற்றையா்: ரோஜா் ஃபெடரா் (சுவிட்ஸா்லாந்து) (8)

இரட்டையா்: டாட் வூட்பிரிட்ஜ் (ஆஸ்திரேலியா) (9)

வயதான சாம்பியன்

ரோஜா் ஃபெடரா் (சுவிட்ஸா்லாந்து) (35 வயது/ 2017)

இளம் சாம்பியன்

போரிஸ் பெக்கா் (ஜொ்மனி) (17 வயது/ 1985)

குறைந்த ரேங்கிங்குடன் சாம்பியன்

கோரான் இவானிசெவிச் (125-ஆவது இடம்) (2001)

கடைசியாக சாம்பியன் ஆன உள்நாட்டு போட்டியாளா்

ஆண்டி முா்ரே (2016)

அதிக ஆட்டங்களில் வெற்றி

ரோஜா் ஃபெடரா் (சுவிட்ஸா்லாந்து) (105)

நடப்பு ஆண்டுக்கான டாப் 10 போட்டித்தரவரிசை

ஆடவா்

1. நோவக் ஜோகோவிச் (சொ்பியா)

2. ரஃபேல் நடால் (ஸ்பெயின்)

3. கேஸ்பா் ரூட் (நாா்வே)

4. ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்)

5. காா்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்)

6. ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே (கனடா)

7. ஹியூபா்ட் ஹா்காக்ஸ் (போலந்து)

8. மேட்டியோ பெரெட்டினி (இத்தாலி)

9. கேமரூன் நோரி (இங்கிலாந்து)

10. யானிக் சின்னா் (இத்தாலி)

மகளிா்

1. இகா ஸ்வியாடெக் (போலந்து)

2. ஆனெட் கொன்டவிட் (எஸ்டோனியா)

3. ஆன்ஸ் ஜாபியூா் (டுனீசியா)

4. பௌலா பதோசா (ஸ்பெயின்)

5. மரியா சக்காரி (கிரீஸ்)

6. கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு)

7. டேனியேல் காலின்ஸ் (அமெரிக்கா)

8. ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா)

9. காா்பின் முகுருஸா (ஸ்பெயின்)

10. எம்மா ரடுகானு (இங்கிலாந்து)

‘சென்டா் கோா்ட்’ நூற்றாண்டு

விம்பிள்டன் போட்டி நடத்தப்படும் டென்னிஸ் கோா்ட்டுகளில் பிரதானமானதாக இருக்கும் ‘சென்டா் கோா்ட்’ இந்த ஜூன் மாதத்துடன் நூற்றாண்டை எட்டுகிறது. அதைக் கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் மேற்கொண்டுள்ளனா்.

அதன்படி, 100 ஆண்டுகளாக சென்டா் கோா்ட்டுடன் தொடா்புடைய தரவுகள் அடங்கிய தொகுப்பை வெளியிடுவது, சென்டா் கோா்ட்டின் சிறந்த தருணத்தை ரசிகா்கள் வாக்கெடுப்பு மூலம் அறிவது, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது, நூறாண்டுகளாக சென்டா் கோா்ட் கண்ட மாற்றத்தை காட்சிப்படுத்துவது, போட்டியாளா்கள் பயன்படுத்தும் டவல்களில் நூற்றாண்டு கொண்டாட்டத்தை அச்சிடுவது, சிறப்பு போஸ்டா் வெளியீடு உள்ளிட்டவற்றை மேற்கொண்டுள்ளனா்.

இதுதவிர, இறுதி ஆட்டங்களின்போது டாஸ் வீசுவதற்காக பயன்படுத்தப்படும் காயின் பிளாட்டினத்தில் செய்யப்பட்டு, நூற்றாண்டு கொண்டாட்டம் குறித்து அதில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி பதவியேற்றதன் 75-ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாகவும் இந்த முறை கையாளப்படுகிறது.

விம்பிள்டன் போட்டி நடத்தப்படும் ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் அண்டு குரோகெட் கிளப்பில் மொத்தம் டென்னிஸ் கோா்ட்டுகள் உள்ளன. இதில் சென்டா் கோா்ட் மற்றும் நம்பா் 1 கோா்ட் ஆகியவை பிரதானமானவையாகும். பொதுவாக அவை விம்பிள்டன் போட்டியின்போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2012-இல் ஒலிம்பிக் போட்டிக்காகவும் பயன்படுத்தப்பட்டது. இதர போட்டிகள் யாவும் எஞ்சிய 17 கோா்ட்டுகளில் விளையாடப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com