இந்திய அணிக்கு எதிராக 76 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த்: 2-ம் நாள் ஹைலைட்ஸ் விடியோ
By DIN | Published On : 25th June 2022 10:39 AM | Last Updated : 25th June 2022 10:48 AM | அ+அ அ- |

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்குகிறது.
டெஸ்டுக்கு முன்பு லீசெஸ்டர் நகரில் இந்தியா - லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டம் வியாழன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பயிற்சி ஆட்டம் என்பதால் இந்திய அணியைச் சேர்ந்த சில வீரர்கள் லீசெஸ்டர்ஷைர் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டர் பலரும் அதிக ரன்கள் எடுக்காத நிலையில் விக்கெட் கீப்பர் பேட்டர் பரத் ஆட்டமிழக்காமல் 70 ரன்களும் உமேஷ் யாதவ் 23 ரன்களும் எடுத்து இந்திய அணிக்குக் கெளரவமான ஸ்கோரை வழங்கினார்கள். கோலி 33 ரன்களும் கேப்டன் ரோஹித் சர்மா 25 ரன்களும் எடுத்தார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 60.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது.
இதன்பிறகு லீசெஸ்டர்ஷைர் முதல் இன்னிங்ஸில் 57 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணிக்காக விளையாடிய இந்திய வீரர் ரிஷப் பந்த் 76 ரன்கள் எடுத்தார். ஷமி, ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்திய அணி 2-ம் நாள் முடிவில் 2-வது இன்னிங்ஸில் 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது. பரத் 31, விஹாரி 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஷிப்மன் கில் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.