டெஸ்ட் உலக சாம்பியன் நியூசிலாந்துக்கு என்ன ஆச்சு?

இந்த வீழ்ச்சியை யாரும் எதிர்பார்க்கவில்லை.
டெஸ்ட் உலக சாம்பியன் நியூசிலாந்துக்கு என்ன ஆச்சு?
Published on
Updated on
1 min read

கடந்த வருடம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் உலக  சாம்பியனாக ஆனது நியூசிலாந்து அணி. 

நடப்பு சாம்பியனாக இருந்தபோதும் இந்தமுறை மிக மோசமாக விளையாடி வருகிறது. இந்த வீழ்ச்சியை யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-1 எனத் தோற்றது நியூசிலாந்து. சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக 1-1 என சமன் செய்தது. வங்கதேச அணி நியூசிலாந்தில் ஒரு டெஸ்டில் வெற்றி பெறும் என யார் எதிர்பார்த்திருக்க முடியும்? இந்த வருட பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.

இந்தியாவில் விளையாடிய டெஸ்ட் தொடரில் தோல்வி. சொந்த மண்ணில் விளையாடிய இரு தொடர்களையும் வெல்ல முடியவில்லை. நியூசிலாந்தின் வீழ்ச்சி அப்போதே ஓரளவுக்குத் தெரிய ஆரம்பித்தது. 

இந்நிலையில் இங்கிலாந்தில் விளையாடிய 3 டெஸ்டுகளிலும் தோற்று தொடரை முழுமையாக இழந்துள்ளது நியூசிலாந்து. இத்தனைக்கும் மூன்று டெஸ்டுகளிலும் சிலசமயங்களின் நியூசிலாந்தின் கையே ஓங்கியிருந்தது. நியூசிலாந்து அணி வெல்லவேண்டிய தொடர் இது. மூன்று முறையும் இலக்கை அபாரமாக விரட்டி வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து தவறவிட்ட தருணங்கள்

முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை 141 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.

2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 553 ரன்கள் எடுத்தது.

3-வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 55/6 என இங்கிலாந்தைத் தடுமாற வைத்தது. 

இத்தனைச் சாதகமான அம்சங்கள் இருந்தபோதும் வெற்றி கை நழுவிப் போனது. மூன்று டெஸ்டுகளிலும் தோல்வி என்பது முற்றிலும் நியாயமில்லாத முடிவு என்றே நியூசி. ரசிகர்கள் கருதுகிறார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு விளையாடிய 9 டெஸ்டுகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி தரவரிசையில் 4-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் நியூசிலாந்து அணி 8-ம் இடத்தில் உள்ளது. மூன்று வெற்றிகள் பெற்றாலும் அதற்கு முன்பு மோசமாக விளையாடியதால் இங்கிலாந்து அணி 7-ம் இடத்தில் உள்ளது. 

உலக சாம்பியன் எப்போது, எப்படி மீண்டு வரும் என்பது தான் ரசிகர்களின் கேள்வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com